23. | கறிமாமிள கும்மிகு வன்மரமும் | | மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல் | | நெறிவார்குழ லாரவர் காணடஞ்செய் | | நெல்வாயி லரத்துறை நின்மலனே | | வறிதேநிலை யாதஇம் மண்ணுலகின் | | நரனாக வகுத்தனை நானிலையேன் | | பொறிவாயில்இவ் வைந்தினை யும்மவியப் | | பொருதுன்னடி யேபுகுஞ் சூழல்சொல்லே. | | 2 |
கு-ரை: "நல்வாய்" என்றதில் வாய் - துணை. "இல்" என்றது இல்லாளைக் குறித்தது. "பிறனில் விழையாமை" (குறள், அதி. 15) என்றாற்போல. "இல் செய்தார்" என்றது, 'பொருள் செய்தார்' என்றல் போல, 'இல்லாளை அடைந்தார்' எனப்பொருள் தந்தது. "உடுத்தார்" என்றது, இனிது வாழும் வாழ்க்கை வகையில் ஒன்றை எடுத்து ஓதியது ஆகலின், 'உண்டார்' என்பதும் தழுவப்பட்டது. சொல்லை உடையாரை, "சொல்" எனப் பாற்படுத்தருளினார். இத்திருப்பதிகம் முழுதும், "உய்ய" என்பதனை, 'உய்ந்து' எனத் திரிக்க. சூழ்ச்சியை, "சூழல்" என அருளினார். இறைவனிடம் தம் அடிமை தோன்ற வெளிப்படையாகக் கூறாது குறிப்பாற் கூற நினைந்தாராகலின், 'உய்யும் வழியைச் சொல்' என, அது வேறொன்று உளதுபோல அருளினாராயினும், 'உய்தி நீயேயாகலின், உன்னை வேண்டுகின்றேன்; என்னை உய்யக்கொள்' என்பதே திருக்குறிப்பு என்க. 2. பொ-ரை: கறிக்கப்படுகின்ற மிளகையுடைய கொடியையும், மிக்க வலிய மரங்களையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள, நெறித்த நீண்ட கூந்தலையுடைய மகளிர்தாம் பிறர் அனைவரும் விரும்பிக் காணத்தக்க நடனத்தைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கும் மாசற்றவனே, உயிர்கள் பலவும் பயன் ஏதும் இன்றிப் பிறந்து இறக்கும் இம் மண்ணுலகத்தில் அடியேனை மகனாகப் படைத்தாய்; ஆதலின், நான் இறவாது இரேன்; அதனால், 'பொறி' எனப்படுகின்ற, அவாவின் வாயில்களாகிய இவ்வைந்தினையும் அடங்குமாறு வென்று, உன் திருவடிக்கண்ணே புகுதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள். கு-ரை: "குழலாரவர்" - அவர், பகுதிப்பொருள் விகுதி. 'காண நடஞ்செய்' என்பது பிழைபட்ட பாடம். இத்திருப்பாடல், "பொறிவாயில் ஐந்தவித்தான்" என்னும் திருக்குறளை (6) நினைப்பிப்பது.
|