பக்கம் எண் :

453
 
24.

புற்றாடர வம்மரை ஆர்த்துகந்தாய்

புனிதாபொரு வெள்விடை யூர்தியினாய்

எற்றேஒரு கண்ணிலன் நின்னையல்லால்

நெல்வாயி லரத்துறை நின்மலனே

மற்றேல்ஒரு பற்றிலன் எம்பெருமான்

வண்டார்குழ லாள்மங்கை பங்கினனே

அற்றார்பிற விக்கடல் நீந்தியேறி

அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

3


25.

கோஓடுயர் கோங்கலர் வேங்கையலர்

மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்

நீஇடுயர் சோலைநெல் வாயிலரத்

துறைநின்மல னேநினை வார்மனத்தாய்

1

3. பொ-ரை: புற்றின்கண் வாழ்கின்ற ஆடுகின்ற பாம்பை விரும்பி அரையின்கண் கட்டியவனே, தூய்மையானவனே, போர் செய்கின்ற வெண்மையான இடப ஊர்தியை உடையவனே, எம் பெருமானே, வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய உமையம்மையை ஒருபாகத்தில் உடையவனே, திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கும் மாசற்றவனே, அடியேன் ஒருகண் இல்லாதவனாய் இருக்கின்றேன்; இஃது எத்தன்மைத்து என்பேன்! மற்றும் வினவின், உன்னையன்றி வேறொரு பற்றுக்கோடு இல்லேன்; ஆதலின், அடியேன், இறப்புப் பொருந்திய பிறவிக் கடலைக் கடந்து கரையேறிப் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

கு-ரை: "ஆர்த் துகந்தாய்" என்றதனை, 'உகந்து ஆர்த்தாய்' என மாற்றி யுரைக்க. இறைவனது விடைக்குப் போர் செய்தல் இன்மையின், "பொருவிடை" என்றது, இனம்பற்றிய அடை புணர்த்ததாம்; இறைவனைச் சார்ந்த பொருள்கட்கு இவ்வாறான அடைபுணர்த்தல் பின்னும் வருதலை அறிந்துகொள்க. இனி, 'திரிபுரம் எரித்த ஞான்று திருமால் உருதிரிந்து வந்து தாங்கிய இடபமே போர்விடை' என்றும், 'அறக் கடவுள் உருத்திரிந்து வந்த இடபம் அறவிடை' என்றும் கூறுப. 'அற்றம்' என்பது, அம்முக் குறைந்து நின்றது. அற்றம் - அறுதி; இறப்பு. இத்திருப்பாடல், 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர்' என்னும் திருக்குறளை (10) நினைப்பிப்பது, 'மற்றேயொரு பற்றிலன்' என்பதும் பாடம்.

4. பொ-ரை: கிளைகள் உயர்ந்த கோங்க மரத்தின் மலர்களையும், வேங்கை மரத்தின் மலர்களையும் மிகுதியாகத் தள்ளிக்