பக்கம் எண் :

454
 

ஓஒடுபு னற்கரை யாம்இளமை

உறங்கிவ்விழித் தாலொக்கும் இப்பிறவி

வாஅடியி ருந்துவருந் தல்செய்யா

தடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

4


26.

உலவும்முகி லிற்றலை கற்பொழிய

உயர்வேயொ டிழிநிவ வின்கரைமேல்

நிலவும்மயி லாரவர் தாம்பயிலும்

நெல்வாயி லரத்துறை நின்மலனே

புலன்ஐந்து மயங்கி அகங்குழையப்

பொருவேலொர் நமன்றமர் தாம்நலிய

அலமந்தும யங்கி அயர்வதன்முன

அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

5



கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள, நெடியனவாக ஓங்கிய சோலைகளை உடைய திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே, உன்னை நினைகின்றவரது நெஞ்சத்தில் வாழ்பவனே, இப்பிறப்பு, உறங்கியபின் விழித்தாற் போல்வது; இதன்கண் உள்ள இளமையோ, ஓடுகின்ற நீரின் கரையை ஒக்கும்; ஆதலின், 'என் செய்வது' என்று மெலிவுற்று நின்று வருந்தாது, அடியேன், இப் பிறவியிலிருந்து பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

கு-ரை: இத்திருப்பாடலில் அளபெடைத் தொடை வந்தது. அளபெடையின்றி ஓதுதல்பாடமாகாமை அறிக. ஓடு புனற்கரை - ஆற்றின் கரை; அது நிலையாது அழிதல் திண்ணமாகலின், யாக்கை நிலையாமைக்கு உவமையாயிற்று. உறங்கி - உறங்கியபின். பிறப்பை, 'உறங்கியபின் விழித்தாற் போல்வது' எனவே, இறப்பு, விழித்தபின் உறங்கினாற் போல்வது என்பது பெறப்படும். படவே, 'பிறப்பும் இறப்பும், விழிப்பும் உறக்கமும் போலக் கடிதின் மாறி மாறி வரும்' என யாக்கையது நிலையாமையை அருளிச் செய்தவாறாயிற்று. இது, "உறங்குவது போலும் சாக்கா டுறங்கி - விழிப்பது போலும் பிறப்பு" என்னும் திருக்குறளை (339) மேற்கொண்டு ஓதியதாதல் அறிக.

5. பொ-ரை: உலாவுகின்ற மேகங்களினின்றும் மலையின்கண் மழை பொழியப்பட, அந்நீர், ஓங்கிய மூங்கில்களோடு இழிந்து