பக்கம் எண் :

455
 
27.

ஏலம்மில வங்கம் எழிற்கனகம்

மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்

நீலம்மலர்ப் பொய்கையில் அன்னமலி

நெல்வாயி லரத்துறை யாய்ஒருநெல்

வாலூன்ற வருந்தும் உடம்பிதனை

மகிழாதழ காஅலந் தேன்இனியான்

ஆலந்நிழ லில்லமர்ந் தாய்அமரா

அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

6



வருகின்ற நிவாநிதியின் கரைமேல் உள்ள, விளங்குகின்ற மயில் போலும் மகளிர் ஆடல் பாடல்களைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியுள்ள மாசற்றவனே, ஐந்து புலன்களும் தத்தமக்கு உரிய பொறிகளுக்கு எதிர்ப்படாது மாறும்படியும், மனம் மெலியும்படியும், போர் செய்கின்ற முத்தலை வேலை (சூலத்தை) உடைய கூற்றுவனது ஏவலர் வந்து வருத்த, பற்றுக்கோடின்றி, உணர்வு தடுமாறி நின்று இளைத்தற்குமுன், அடியேன், இறப்பினின்றும் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

கு-ரை: தலைப் பெயல் சிறந்ததாகலின் அதனையே அருளினார். "அவர்", பகுதிப் பொருள் விகுதி. "புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐமேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள்புரிவான்" (தி. 1 ப. 130 பா. 1) என்று சம்பந்தப் பெருமானாரும்,

"வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன்முன்
இம்மை உன்தாள் என்றன் நெஞ்சத்து எழுதிவை"

(தி. 4 ப. 96 பா. 6) என அப்பர் பெருமானாரும் அருளிச் செய்தமை காண்க.

6. பொ-ரை: 'ஏலம் இலவங்கம்' என்னும் மரங்களையும், அழகிய பொன்னையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவா நதியின் கரையில் உள்ள, நீலோற்பல மலர்ப் பொய்கையில் அன்னங்கள் நிறைந்திருக்கும் திருநெல்வாயில் அரத்துறையில் எழுந்தருளியுள்ளவனே, அழகனே, ஆல் நிழலில் அமர்ந்தவனே, என்றும் இறவாதிருப்பவனே, ஒரு நெல்லின் வால் ஊன்றினும் பொறாது வருந்துவதாகிய இவ்வுடம்பினை யான் உறுதி யுடையது என்று கருதி