28. | சிகரம்முகத் திற்றிர ளாரகிலும் | | மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல் | | நிகரின்மயி லாரவர் தாம்பயிலுந் | | நெல்வாயி லரத்துறை நின்மலனே | | மகரக்குழை யாய்மணக் கோலமதே | | பிணக்கோலம் தாம்பிற வியிதுதான் | | அகரம்முத லின்னெழுத் தாகிநின்றாய் | | அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே. | | 7 |
மகிழாது உறுதியை நாடி உழன்றேன்; அடியேன் இதனினின்றும் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லி யருள். கு-ரை: 'நீல் அம் மலர்' எனப்பிரித்து, 'நீலம்' என்றதில் அம்முக் குறைந்ததாக உரைக்க 'ஊன்றவும்' என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று அமரன் - மரித்தல் இல்லாதவன்; இஃது, ஈண்டுக் காரணக் குறியாய், சிவபெருமானை உணர்த்திற்று. 7. பொ-ரை: மலைச் சிகரத்தினின்றும், திரளாய் நிறைந்த அகிலையும் பிறவற்றையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரையில் உள்ள, உலகின் மயில்கள் போலாத வேறுசில மயில்கள் போலும் சிறந்த மகளிர் ஆடல் பாடல்களைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக் கின்ற மாசற்றவனே, காதில் மகர குண்டலத்தை அணிந்தவனே, எழுத்துக்களுக்கு எல்லாம் அகரமாகிய முதல் எழுத்துப்போன்று, பொருள்களுக்கெல்லாம் முதற்பொருளாகி நிற்பவனே, இவ்வுடம்பு தான், மணக்கோலந்தானே கடிதிற் பிணக்கோலமாய் மாறுகின்ற நிலையாமையை உடையது; ஆதலின், அடியேன் இதனினின்றும் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியைச் சொல்லியருள். கு-ரை: "அகிலும்" என்ற உம்மை எதிரது தழுவிய எச்சம். "நிகரில் மயில்" என்றதற்கு ஈண்டு உரைத்தவாற்றை, "அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ" என்னும் திருக்குறட்குப் (1081) பரிமேலழகர் உரைத்த உரைபற்றியும் உணர்க. "அவர்", பகுதிப் பொருள் விகுதி; தாம், அசைநிலை. "பிறவி" என்றது உடம்பை. "இதுதான்" என்னும் பிரிநிலை, உடம்பினது இழிவு தோற்றி நின்றது. "அகர முதலின் எழுத்தாகி நின்றாய்" என்றது, "அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி - பகவன் முதற்றே உலகு" என்னும் திருக்குறளை (1) மேற்
|