பக்கம் எண் :

457
 
29.

திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன்

திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி

ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின்

நெல்வாயி லரத்துறை நின்மலனே

பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்

பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன்

அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான்

அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

8

30.

மாணாவுரு வாகியொர் மண்ணளந்தான்

மலர்மேலவன் நேடியுங் காண்பரியாய்

நீணீண்முடி வானவர் வந்திறைஞ்சுந்

நெல்வாயி லரத்துறை நின்மலனே

 

 கொண்டு அருளிச்செய்ததாதல் அறிக. 

8. பொ-ரை: திண்ணிய தேர்களை உடைய, நீண்ட தெருக்களையுடைய இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனது திரண்ட தோள்கள் இருபதையும் முன்னர் நெரித்துப் பின்னர் அவனுக்கு அருள்பண்ணி, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே, மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ளார்க்குத் தலைவனே, நான் முற்பிறப்பிற் செய்த நல்வினையினால் உனது பெயரைப் பல காலும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி, அடியேன், உலகியலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

கு-ரை: தேவர்க்குத் தேவர், காரணக் கடவுளர்; அயனும், மாலும். நாமமாவது, திருவைந்தெழுத்து. 'பண்டு செய்த பாக்கியத்தால் திருவைந்தெழுத்தைப் பயிலப் பெற்றேன்; இனி, அதன் பயனைப் பெறுதல் வேண்டும்; அப் பயனை அளித்தருள்' என வேண்டியருளியவாறு.

9. பொ-ரை: சிறப்பில்லாத குறள் உருவாகி உலகத்தை அளந்த திருமாலும், மலரின்கண் இருக்கும் பிரமனும் தேடியும் காணுதற்கு அரியவனே, நீண்ட முடியினையுடைய தேவர்கள் வந்து வணங்குகின்ற, திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றனவனே,