| |  | வாணார்நுத லார்வலைப்பட் டடியேன் |  |  | பலவின்கனி ஈயது போல்வதன்முன் |  |  | ஆணோடுபெண் ணாமுரு வாகிநின்றாய் |  |  | அடியேனுய்யப் போவதொர் சூழல்சொல்லே. |  |  | 9 | 
| 31. | நீரூர நெடுவயல் சூழ்புறவின் |  |  | நெல்வாயி லரத்துறை நின்மலனைத் |  |  | தேரூர்நெடு வீதிநன் மாடமலி |  |  | தென்னாவலர் கோனடித் தொண்டன்அணி |  |  | ஆரூரன் உரைத்தன நற்றமிழின் |  |  | மிகுமாலையொர் பத்திவை கற்றுவல்லார் |  |  | காரூர்களி வண்டறை யானைமன்ன |  |  | ரவராகியொர் விண்முழு தாள்பவரே. |  |  | 10 | 
திருச்சிற்றம்பலம் 
 மாசற்றனவனே, ஆணும், பெண்ணுமாகிய உருவத்தைக் கொண்டு நிற்பவனே, அடியேன், ஒளி பொருந்திய நெற்றியையுடைய மாதரது மையலாகிய வலையிற்பட்டு, பலாப் பழத்தில் வீழ்ந்த ஈயைப் போல அழிவதற்குமுன், அவர் மையலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள். கு-ரை:  "சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் - கூனும் குறளும் ஊமும் செவிடும் - மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு - எண்பே ரெச்சம்" (புறம் - 28) என்பவாகலின், குறள் உருவினை, "மாணா உரு" என்று அருளிச்செய்தார். "நீள் நீள்" என்றது, 'நீளல் நீண்ட' எனப் பொருள் தந்து, "உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன்" (கலி. - 23) என்றாற் போல நின்றது. 'வாளார்' என்பது, எதுகை நோக்கி, "வாணார்" எனத் திரிந்து நின்றது. "நீணுலகெலாம்" (தி. 5 ப. 2 பா. 4) என்றாற்போல, "ஆணோடு பெண்ணாம் உருவாகி நின்றாய்" என்றது, அவ்வுருவம் பெண்ணாசை நீக்கியருளு வது என்னும் குறிப்புடையது; "நின்றனையே - பெண்பயிலுருவ மொடு நினைந் தெனது பெண்மயலகற்றுநா ளுளதோ" (சோணசைல மாலை - 10) எனப் பிற்காலத்தவரும் கூறுமாறு அறிக. 10. பொ-ரை:  நீர் பாய்கின்ற நீண்ட வயல்கள் சூழ்ந்த, முல்லை நிலத்தை உடைய திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனாகிய இறைவனை, தேர் ஓடும் நீண்ட |