பக்கம் எண் :

460
 

4. திருவஞ்சைக்களம்

பதிக வரலாறு:

நம்பியாரூரர் திருப்புக்கொளியூர் அவிநாசியில் முதலையுண்ட பாலனை அழைத்துத் தந்து மலைநாடு சென்றார். சேரமான்பெருமாள் நம்பியாரூரர் எழுந்தருளும் செய்தி கேட்டு மனமகிழ்ந்து நகரை யலங்கரித்து அமைச்சர்கள் புடைசூழச் சென்று மலைநாட்டெல்லையில் எதிர்கொண்டு வணங்கி, யானைமேல் அழைத்துவந்து வஞ்சிமாநகரில் அவருடன் தங்கி மகிழ்வுடனிருந்தனர். பின்னர் அங்கிருந்து பல தலங்களையும் வணங்கி மகோதையை அடைந்தனர். பலநாள் சென்ற பின் ஒரு நாள் சேரர்பெருமான் நீராடும் வேளையில் வன்றொண்டர் பரமரை முன்பு தாம் பிரிந்து போந்து இவ்வுலகில் வந்த நன்னெறி முடியும் எல்லைவரத் திருவஞ்சைக்களத்தை அடைந்து திருக்கோயிலை வலம் வந்து இறைவனைப் பணிந்து இவ்வுலகில் பாசத்தால் கட்டப்பட்ட மனைவாழ்க்கை அறுத்திட்டுத் திருவடியில் சேர்த்தருள வேண்டுமென்னும் குறிப்போடு பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 வெள்ளானைச் சருக்கம். 14-30)

குறிப்பு : இத்திருப்பதிகம், சிவபிரான், உலகத்தவர் வெறுக்கும் கோலங்கள் பலவற்றை விரும்பி மேற்கொள்ளுதற்குக் காரணம் என்னை என்று வினவும் முகத்தால், அவையனைத்தும் அவன் தன்பொருட்டன்றி உயிர்களின் பாசத்தை அறுத்தற்பொருட்டே கொள்கின்றனவாதலைப் பெறவைத்து, தமது வாழ்க்கையாகிய பாசத்தையும் அறுத்திட வேண்டும் என்னும் குறிப்புத் தோன்ற அருளிச்செய்தது.

பண்: இந்தளம்

பதிக எண்: 4

திருச்சிற்றம்பலம்

32.

தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே

சடைமேற்கங்கை வெள்ளந் தரித்ததென்னே

அலைக்கும்புலித் தோல்கொண் டசைத்ததென்னே

அதன்மேற்கத நாகங்கச் சார்த்ததென்னே



1. பொ-ரை: மலைக்கு நிகராகிய தன்மையால் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள் வலம்புரிச் சங்குகளைப் பற்றி ஈர்த்து வந்து