| மலைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள் | | வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண் | | டலைக்குங்கட லங்கரை மேல்மகோதை | | அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. | | 1 |
33. | பிடித்தாட்டிஓர் நாகத்தைப் பூண்டதென்னே | | பிறங்குஞ்சடை மேற்பிறை சூடிற்றென்னே | | பொடித்தான்கொண்டு மெய்ம்முற்றும் பூசிற்றென்னே | | புகர்ஏறுகந் தேறல் புரிந்ததென்னே | | மடித்தோட்டந்து வன்றிரை யெற்றியிட | | வளர்சங்கம்அங் காந்துமுத் தஞ்சொரிய | | அடித்தார்கட லங்கரை மேல்மகோதை | | அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. | | 2 |
எறிந்து முழங்கி மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய 'மகோதை' என்னும் நகரத்தின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய, 'திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ தலைக்கு அணிகலமாகத் தலைமாலையை அணிந்தது என்? சடையின்மேல், 'கங்கை' என்னும் ஆற்றைத் தாங்கியது என்? கொல்லும் தன்மை யுடைய புலியினது தோலை உரித்தெடுத்து அரையில் உடுத்தது என்? அவ்வுடையின்மேல் சினத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டியது என்? கு-ரை: சிவபிரான், தலைமாலையை மார்பில் அணிதலேயன்றித் தலையிலும் அணிந்துள்ளான் என்பது, "தலைமாலை தலைக் கணிந்து" "தலையா லேபலி தேருந் தலைவன்" (தி. 4 ப. 9 பா. 1) என்றாற்போலத் திருமுறைகளிற் பிறவிடத்தும் காணப்படும். இது தலையில் அணியும் உருத்திராக்கம் போல்வதாம். தலைகள், இறந்த பிரமன் முதலியோருடையவை. கதம் - சினம். 'நாகக்கச்சு' என்பதும் பாடம். 'மகோதை' என்பது நகரமும், 'அஞ்சைக்களம்' என்பது திருக்கோயிலும் என்க. 2. பொ-ரை: வலிய அலைகள் தம் வடிவத்தைச் சுருளாகச் செய்து ஓடிவந்து மோதுதலினால், கரு வளர்கின்ற சங்குகள் வாய் திறந்து முத்துக்களை ஈன, இங்ஙனம் அலைத்து முழங்குகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, 'மகோதை' என்னும்
|