பக்கம் எண் :

463
 
35.

இழைக்கும்மெழுத் துக்குயி ரேஒத்தியால்

இலையேஒத்தி யால்உளை யேஒத்தியால்

குழைக்கும்பயிர்க் கோர்புய லேஒத்தியால்

அடியார்தமக் கோர்குடி யேஒத்தியால்

மழைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள்

வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்

டழைக்குங்கட லங்கரை மேல்மகோதை

அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

4

 

என்பது திருக்குறிப்பு. நெல்லிக்கனி, அமுதத் தன்மையுடையது ஆதலின், "நெல்லிக் கனியே" என்றது, 'அமுதமே' என்றவாறு நெல்லிக்கனி அத்தன்மைத்தாதலை, அதியமான் ஒளவையார்க்கு அளித்த நெல்லிக்கனி பற்றியும் அறியலாகும். மாணிக்கவாசகரும் இறைவனை, "நெல்லிக் கனியைத் தேனைப் பாலை - நிறைஇன்னமுதை அமுதின் சுவையை" (தி. 8 புணர்ச்சிப் பத்து - 4) என்று அருளிச் செய்தார். 'சிறியாரும்' என்னும் உம்மையும், 'பெரியார்' என்னும் ஆக்கவினைக் குறிப்பில் ஆக்கச்சொல்லும் தொகுத்தலாயின. 'மனந்தேறலுற்றால்' என்பது வலிந்து நின்றது. 'நீ அவர் மனத்து ஏறலுற்றால்' எனப் பொருள் கூறுவாரும் உளர்.

4. பொ-ரை: துளிகளைத் தூற்றுதலால் மேகத்திற்கு நிகராகும் தன்மையில் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள், பல பொருள்களை ஈர்த்து வந்து மோதி முழங்கி, வலம்புரிச் சங்கின் இனிய ஓசையால் யாவரையும் தன்பால் வருவிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, 'மகோதை' என்னும் தலத்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, உலகத்தை இயக்குதலில், எழுதப்படும் எழுத்துக்களுக்கு உயிரெழுத்துப் போல்கின்றாய்; இல்லாதாய் போல்கின்றாய்; ஆயினும் உள்ளாய் போல்கின்றாய்; உயிர்கட்கு உதவுதலில் தளிர்க்கும் பயிர்க்கு மேகம் போல்கின்றாய்; அடியார்களுக்கு அணியையாதலில், அவரோடு ஒருகுடிப் பிறப்பினை போல்கின்றாய்.

கு-ரை: 'ஆதலால், அடியேனுக்கு அருளல் வேண்டும்' என்பது குறிப்பெச்சம். 'எழுத்து' எனச் சிறப்பித்துக் கூறப்படுவன உயிரும் மெய்யுமே யாகலானும், அவற்றுள் உயிரைப் பிரித்தமையால், 'இழைக்கும் எழுத்து' என்றது, மெய்யெழுத்தாயிற்று. மெய்யெழுத்துக்கள் தனித்தியங்கும்வழி அகரத்தால் இயக்கப் படுமாயினும்