பக்கம் எண் :

464
 
36.

வீடின்பய னென்பிறப் பின்பயனென்

விடையேறுவ தென்மத யானை நிற்கக்

கூடும்மலை மங்கை யொருத்தியுடன்

சடைமேற்கங்கை யாளைநீ சூடிற்றென்னே

பாடும்புல வர்க்கரு ளும்பொருளென்

நெதியம்பல செய்த கலச்செலவின்

ஆடுங்கட லங்கரை மேல்மகோதை

அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

5

 

மொழியிடத்து இயங்குங்காலத்துப் பிற உயிர்களானும் இயங்குமாதலின், "உயிர்" எனப் பொதுப்பட அருளிச்செய்தார். இனி, "உயிர்" என்றது, தலைமை பற்றி அகரத்தைக் குறிக்கும் எனக் கொண்டு, 'எழுத்து' என்றது, ஏனைய எல்லா எழுத்துக்களையும் என்று உரைத்தலுமாம். எழுத்துக்கள் இயங்கும் முறைமை கட்புலனாக அறியப் படுதல் வரிவடிவிலாகலின், "இழைக்கும் எழுத்து" என விதந்தருளினார். இறைவன் இல்லாதவன்போறலாவது, ஆய்வு முறையில் எவ்வாற்றால் தேடினும் அங்ஙனம் தேடுவார்க்கு அகப்படாதே நிற்றல். உள்ளவன் போறலாவது, அன்பினால் அடைந்தார்க்குப் பல்லாற்றானும் அநுபவப் பொருளாதல். இவ்விடத்தும், 'ஒத்தி' என ஒப்புமை வகையால் அருளியது, உரையுணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வாயிருப்பினும், அடியவர்கட்கு ஏனைப்பொருள் போல உரையுணர்வினாற்றானே உணரப்படுதலை நினைந்து என்க. இந்நிலையையே,

"உணர்வி னேர்பெற வருஞ்சிவ போகத்தை ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி யளவினும் எளிவரஅருளினை"

என விளக்கியருளினார், சேக்கிழார் நாயனார். (தி. 12 பெ. பு. திருஞா. பு 161) 'உனையே ஒத்தியால்' என்பது பிழைபட்ட பாடம். இவ்வாறெல்லாம் நிற்றலின் அடியேனுக்கும் அவ்வாற்றால் அருள் பண்ண வேண்டும் என்பது குறிப்பு. 'எழுத்துக்கு உயிரே ஒத்தி, குழைக்கும் பயிர்க்குப் புயலே ஒத்தி' என்பவை, மறுபொருளுவமம்.

5. பொ-ரை: பொன், மணி முதலிய செல்வங்களைத் தந்த மரக்கலங்களினது செலவினையுடைய, மூழ்குதற்குரிய கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய, 'மகோதை' என்னும் நகரின்கண்