பக்கம் எண் :

465
 
37.இரவத்திடு காட்டெரி யாடிற்றென்னே

இறந்தார்தலை யிற்பலி கோடலென்னே

பரவித்தொழு வார்பெறு பண்டமென்னே

பரமாபர மேட்டி பணித்தருளாய்

 

உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, நீ, 'வீடு, பிறப்பு' என்னும் இரண்டனுள் ஒன்றையே அமையாது, மறுதலைப் பொருள்களாகிய அவ்விரண்டனையும் அமைத்ததன் பயன் யாது? மதத்தையுடைய யானை இருக்க, எருதினை ஊர்வது என்? திருமேனியில் நீங்காது பொருந்தியுள்ள மலைமகளாகிய ஒருத்தியோடு கங்கை என்பவளையும் சடையில் வைத்தது என்? உன்னைப் பாடுகின்ற புலவர்க்கு நீ அளிக்கும் பரிசில் யாது?

கு-ரை: 'வீட்டின்' என்னும் டகரம் தொகுத்தலாயிற்று. 'செய்த' என்பது 'ஆக்கிய' என்னும் பொருளதாய், தந்தமையைக் குறித்தது. சேரநாட்டுக் கடற்றுறை பற்றி,

"சேரலர் - சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி"

 -அகம் - 149

எனச் சான்றோருங் கூறினார். 'வீட்டை அமைத்தது, உயிர்களை நிலையாய இன்பத்தில் இருத்துதற் பொருட்டும், பிறப்பை அமைத்தது, அவ்வின்ப நுகர்ச்சிக்குத் தடையாய் உள்ள பாசத்தை அறுத்தற்பொருட்டும், விடையை ஊர்வது, அறத்தை நிலை பெறுத்தற்பொருட்டும், மலை மங்கையோடிருப்பது, உயிர்கட்குப் போகம் அமைதற்பொருட்டும், கங்கையைத் தரித்தது, அப்போகம் பிறவாற்றால் இடையிற் சிதைந்தொழியாவாறு நிலைபெறுத்தற் பொருட்டும் ஆகலின், அவற்றுள் வீடொன்றும் ஒழிந்த எல்லாவற்றையும் எய்திய அடியேனுக்கு, இனி அம் முடிந்த பயனாகிய வீட்டையளித்தருளல் வேண்டும்' என்பது குறிப்பு.

6. பொ-ரை: யாவர்க்கும் மேலானவனே, எல்லார்க்கும் மேலிடத்தில் உள்ளவனே, வலிமையோடு, 'சங்கு, இப்பி, முத்து' என்பவற்றைக் கொணர்ந்து வீசி, வலம்புரிச்சங்கை மேலே கொண்டு முழங்கி, ஆர்ப்பரவத்தையுடையதாகின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள அழகு