| உரவத்தொடு சங்கமொ டிப்பிமுத்தங் | | கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரிகொண் | | டரவக்கட லங்கரை மேல்மகோதை | | அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. | | 6 |
38. | ஆக்கும்மழி வும்மைய நீயென்பன்நான் | | சொல்லுவார்சொற் பொருளவை நீயென்பன்நான் | | நாக்கும்செவி யும்கண்ணும் நீயென்பன்நான் | | நலனேஇனி நான்உனை நன்குணர்ந்தேன் | | நோக்குந்நெதி யம்பல எத்தனையும் | | கலத்திற்புகப் பெய்துகொண் டேறநுந்தி | | ஆர்க்குங்கட லங்கரை மேல்மகோதை | | அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. | | 7 |
நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும்தந்தையே, நீ இராப் பொழுதில் புறங்காட்டில் எரியில் நின்று ஆடியது என்? இறந்தவரது தலையில் பிச்சையேற்றல் என்? உன்னை ஏத்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது? சொல்லியருளாய். கு-ரை: 'இரா' என்பது செய்யுளாகலின் இறுதி குறுகி, 'பனியத்து, வெயிலத்து' என்பதுபோல, அத்துப்பெற்றது, 'இரவத்து, உரவத்து' என்புழி, அத்தின் அகரம் அகரமுனைக் கெடாது நிற்றல்' இலேசினாற்கொள்க. (தொல். எழுத்து. 134) 'முழங்கி' என்னும் எச்சம், 'அரவக்கடல்' என்புழித் தொக்கு நிற்கும், 'உடைய' என்னும் பெயரெச்சக் குறிப்பொடு முடியும். 7. பொ-ரை: எப்பொருட்கும் தலைவனே, இன்பம் தருபவனே, விரும்புகின்ற நுகர்ச்சிப் பொருள்கள் எத்துணை வகையினவற்றையும் மிகுதியாக மரக்கலங்களில் ஏற்றி, நடுவண் செல்லச் செலுத்தி ஆரவாரிக்கின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய, 'திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, அடியேன் இதுபோழ்து உன்னை நன்குணர்ந்தேன்' ஆதலின், 'எப்பொருளின் ஆக்கத்திற்கும், அழிவிற்கும் காரணன் நீயே' என்றும், 'அவற்றிற்குக் காரணங்களாகப் பிற பிற
|