39. | வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன் | | விளங்குங்குழைக் காதுடை வேதியனே | | இறுத்தாய்இலங் கைக்கிறை யாயவனைத் | | தலைபத்தொடு தோள்பல இற்றுவிழக் | | கறுத்தாய்கடல் நஞ்சமு துண்டுகண்டங் | | கடுகப்பிர மன்தலை யைந்திலும்ஒன் | | றறுத்தாய்கட லங்கரை மேல்மகோதை | | அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. | | 8 |
வற்றைச் சொல்லுவாரது சொற்பொருள்களும் நீயே' என்றும், 'புலனுணர்வுக்குக் காரணமான, 'நாக்கு, செவி, கண்' என்பனவும் நீயே' என்றும் துணிந்து சொல்லுவேன். கு-ரை: 'அதனால், அவ்வுணர்வு நிரம்பாத பொழுதைக்குரிய இவ்வுலக வாழ்க்கையை இனி நீ அடியேற்கு வைக்கற்பாலையல்லை' என்பது திருக்குறிப்பு. 'போ' என்பது, 'போக்கு' என வருதல்போல 'ஆ' என்பது 'ஆக்கு' எனப் பெயராய் வந்தது. 'ஆக்கு, அழிவு, நலன்' என்பன ஆகுபெயராய், அவற்றின் காரணங்களையும், 'நிதியம்' என்பது அவ்வாறு அதனாற் கொள்ளப்படும் பொருள்களையும் உணர்த்தின. 'நீ' என்புழியெல்லாம், தொகுக்கப்பட்ட பிரிநிலை ஏகாரங்களை விரிக்க. 'நாக்கு, செவி, கண்' என்றது, பிற கருவிகள் எல்லாவற்றையும் தனித்தனி கூறிக்கொள்ளுதற்கு வைத்த குறிப்பு மொழி. இதுமுதல் மூன்று திருப்பாடல்களிலும், சுவாமிகள், தாம் இறைவனைத் தலைப்படுதல் இன்றி ஒரு நொடிதானும் அமைய மாட்டாமையை நேரே அருளிச்செய்கின்றார். 8. பொ-ரை: ஒளிவிடுகின்ற குழையையணிந்த காதினையுடைய அந்தணனே, கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய 'மகோதை' என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய 'திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, இலங்கைக்கு அரசனாகிய இராவணனை அவனது பத்துத் தலைகளோடு பல தோள்களும் அற்று விழுவன போலும்படி நெரித்தாய்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டு, கண்டம் கறுப்பாயினாய்; பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றை விரைவில் அறுத்தலும் செய்தாய்; அடியேன் எனது மனை வாழ்க்கையை மனத்தாலும் வெறுத்தேன்; உடம்பாலும் துறந்து விட்டேன்.
|