| சண்டேசர், சாக்கியர் வரலாறுகளை, | "இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி |  | இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள் |  | துண்டமிடு சண்டியினை அண்டர் தொழுதேத்தத் |  | தொடர்ந்தவனைப் பணி கொண்ட விடங்கர்" |  | (தி. 7 ப. 16 பா. 3) |  | 'வார்கொண்ட வனமுலையான் உமைபங்கன் கழலே |  | மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்' |  | (தி. 7 ப. 39 பா. 6) | 
என விவரித்துள்ளார். மக்களைச் சிவநெறியில் ஆற்றுப்படுத்தும் முறையில்,'பொய்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின்'
 (தி. 7 ப. 34 பா. 1) எனப் புகலூர் இறைவன் இம்மையில் சோறும் கூறையும் தருவதோடு அம்மையில் சிவலோகமும் அருள்பவன் எனக் கூறியருள்கிறார். ஞானசம்பந்தர், நாவரசர் அருளிய தேவாரத் திருமுறைகளை எத்தனை முறை பாடினாலும் கேட்டு மகிழ்பவன் இறைவன் என்பதை, 'நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரையனும்
 பாடிய நற்றமிழ்மாலை
 சொல்லியவே சொல்லி ஏத்துகப் பானை"(தி. 7 ப. 67 பா. 5) எனக் கூறியருள்கிறார். தேவாரம் அருளிய மூவர் பெயரும் ஒருங்கமைந்த தேவாரம் அவர் திருமுறையில் காணப்படுகிறது. திருக்கேதாரம் திருப்பதிகத்தில், நாவின்மிசை யரையன்னொடு தமிழ் ஞானசம் பந்தன்யாவர் சிவ னடியார்களுக் கடியான்அடித் தொண்டன்
 தேவன் திருக் கேதாரத்தை ஊரன்உரை செய்த
 பாவின் தமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே.
 (தி. 7 ப. 78 பா. 10) எனக் கூறியருள்கிறார். வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தி  |