5. திருவோணகாந்தன்தளி பதிக வரலாறு: சுந்தரர் கச்சூர் ஆலக்கோயிலைப் பணிந்து காஞ்சிபுரம் அணைந்து திருஏகாம்பரம், திருக்கச்சிமேற்றளி இவற்றைப் பரவித் திருவோணகாந்தன்தளியில் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கி உரிமையோடு தோழமைத்திறம் பேசி அடிமைத்திறம் கூறிப் பொன்வேண்டிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா-191.) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவன், தன் அடியார்களிடத்து வைத்துள்ள பேரருட் பெருக்குக்குக் காரணமாக, அவர்கட்கு அவன் மாட்டு உளதாகும் உரிமைபுலப்படுமாறு அருளிச்செய்தது. இன்னோரன்ன திருமொழிகள் பற்றியே பிற்காலத்தாரும் பலபட, பழிப்பது போலப்புகழ் புலப்படச் செய்யும் செய்யுள்கள் பலவற்றை இறைவன்மீது ஆக்கினார். பண்: இந்தளம் பதிக எண்: 5 திருச்சிற்றம்பலம் 42. | நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு | | நித்தல் பூசனை செய்ய லுற்றார் | | கையி லொன்றுங் காண மில்லைக் | | கழல டிதொழு துய்யி னல்லால் | | ஐவர் கொண்டிங் காட்ட வாடி | | ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக் | | குய்யு மாறொன் றருளிச் செய்யீர் | | ஓண காந்தன் தளியு ளீரே. | | 1 |
1. பொ-ரை: 'திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, 'நெய், பால், தயிர் முதலியவற்றால் உம்மை நாள்தோறும் வழிபடுவாரது கையில்காசு ஒன்றும் காணப்படுகின்றதில்லை. அவ்வாறே, உமது கழலணிந்த பாதத்தைக் கும்பிட்டு ஏதேனும் பெற்றாலன்றி, இவ்வுலகத்தில், புலன்களாகிய ஐவர் தண்டலாளர் ஐந்து பக்கம் பற்றி ஈர்த்துச் சுழற்றச் சுழன்று, அச்சுழற்சியாலாகிய துன்பம் என்னும் ஆழ்ந்த குழியில் அகப்பட்டு ஏறமாட்டாது
|