43. | திங்கள் தங்கு சடையின் மேலோர் | | திரைகள் வந்து புரள வீசும் | | கங்கை யாளேல் வாய்தி றவாள் | | கணப தியேல் வயிறு தாரி | | அங்கை வேலோன் குமரன் பிள்ளை | | தேவி யார்கோற் றட்டி யாளார் | | உங்க ளுக்காட் செய்ய மாட்டோம் | | ஓண காந்தன் தளியு ளீரே. | | 1 |
அழுந்திப் போவேனாகிய அடியேனுக்கு, அதனினின்றும் கரையேறும் வழியொன்றனைச் சொல்லியருளீர். கு-ரை: "நெய்யும் பாலும் தயிரும்" என்றது, பிற வழிபாட்டுப் பொருள்களையும் தழுவநின்றது. 'பூசனை செய்யலுற்றால்' என்பதே பாடம் எனல் சிறப்பு. இத் திருப்பதிகத்தும், வருகின்ற திருப்பதிகத்தும் உள்ள திருப்பாடல்களை, எண்சீரடியினவாகச் சீரறுக்கமாட்டாதார், நாற்சீராக அறுத்து, "நெய்யும்பாலும்". "கூடிக்கூடி" என்றாற்போல் வனவற்றை எவ்வாற்றானும் மூவசையினவாக்குமாறின்றி, நாலசைச் சீராகவே கொண்டு இடர்ப்பட்டார், நாலசைச் சீர் வேண்டும் ஆசிரியர், அதனை வலியுறுத்தற் பொருட்டு ஒரோவழிச் சில சீர்களைத் தாம் வேண்டியவாறே நாலசைச் சீராக அறுத்துக் காட்டினும், நேர்பசை நிரைபசைகளையும், நேரசை நிரையசைகளுள்ளே அடக்குதலே அதனாற் பெறும் பயனாகக் கொண்டார் என்பது, அவர் நூலானும், பிறர் நூலானும் நன்குணரக் கிடத்தலின், நாலசைச் சீர்களைக் குற்றுகரமின்றிக் கோடல் பொருந்தாமை யறிக. 2. பொ-ரை: 'திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, பிறை தங்குமாறு சேர்த்துக் கட்டியுள்ள உமது சடையின் மேலும், ஒப்பற்ற அலைகள் தோன்றிப் புரளுமாறு வீசுகின்ற, 'கங்கை' என்னும் தேவியோவெனில், உமது பக்கத்தில் எஞ் ஞான்றும் உள்ள உமாதேவியார்க்கு அஞ்சி ஒருஞான்றும் வாய் திறத்தலே இல்லை; உம் மூத்த மகனாகிய விநாயகனோவெனில், வயிறு ஒன்றையே முதன்மையாக உடையவன்; (பிறிதொன்றையும் அறியான்). இளைய மகனாகிய, அகங்கையில் வேற்படையை யுடைய முருகனோவெனில், விளையாட்டுப் பிள்ளை; (யாதொன்றையும் பேணான்). தேவியாராகிய உமையம்மையாரோவெனில், உம்மை ஒழிந்து அடியவரை ஆளுவாரல்லர்; (நீரோ அடியவர் குறை நோக்கி
|