பக்கம் எண் :

472
 
44.பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்

பேணி உம்கழல் ஏத்து வார்கள்

மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி

மதியு டையவர் செய்கை செய்யீர்

அற்ற போழ்தும் அலந்த போழ்தும்

ஆவற் காலத் தடிகேள் உம்மை

ஒற்றி வைத்திங் குண்ண லாமோ

ஓண காந்தன் தளியு ளீரே.

3

 

யாதும் செய்யீர்) ஆதலின், உம் குடிக்கு யாங்கள் அடிமை செய்ய மாட்டேமாகின்றேம்.

கு-ரை: இடைக்கண் வருவித்துரைத்தன பலவும் இசையெச்சங்கள். 'கோ' என்னும் உயர்திணைச் சொல் அஃறிணை வாய்பாட்டதாய், அல்வழிக்கண் இயல்பாயும், வேற்றுமைக்கண், 'கோஒன்' என, ஒன் சாரியை பெற்றும் பண்டைக் காலத்தில் வழங்கிற்று. பின்னர், சாரியை முதல் ஒகரம் கெட்டு, னகரமே சாரியையாகப் பெற்று வேற்றுமைக்கண், 'கோன்' என வழங்கிற்று. அதன் பின்னர், னகரம் பாலுணர்த்தும் ஈறேயாய் நிற்ப உயர்திணை வாய்பாட்டதேயாய், 'கோ' என்பது வேறு; 'கோன்' என்பது வேறு என இருவேறு சொற்களாயிற்று. அவற்றுள், ஈண்டு 'கோன்' என்பது, தகரத்தொடு புணர் வுழி இரண்டன் தொகைக்கண் ஈறு திரிந்து, "கோற்றட்டி" என நின்றது. இஃதறியாது, 'கோல் தட்டி ஆளார்' எனப் பிரித்து, 'நும் ஆணையைக் கடந்து ஆட் கொள்ளமாட்டார்' எனவும், 'கோல் தட்டியாளால்' என்றும், 'கொற்று அட்டி ஆளார்' என்றும் பாடத்தை வேறு வேறாக ஓதி, முறையே, 'வீணை வாசித்துக்கொண்டிருப்பவள்' எனவும், 'கூலி கொடுத்து ஆளார்' எனவும் உரைப்ப.

3. பொ-ரை: தலைவரே, 'திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, உம்மால் யாதானும் ஒன்றை அடையினும், அடையாதொழியினும் அவ்வாற்றான் வேறுபடுதல் இன்றி எஞ்ஞான்றும் ஒருபெற்றியே உம் திருவடியைப் பற்றிநின்று துதிக்கும் அடியவர், 'நம்மையன்றி வேறொரு துணையும் இல்லாதவர்' என்று நினைத்து, அறிவுடையவர்க்கு உரிய செய்கை ஒன்றும் நீர் செய்கின்றிலீர்; அதனால், உம் அடியவர் தங்கள் கையிற் பொருள் இல்லாதொழிந்த காலத்தும், அது காரணமாக வழியொன்றும் காணாது அலைந்த காலத்தும், உம்மைப் பிறருக்கு ஒற்றியாக வைத்துப்