பக்கம் எண் :

474
 
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும்

சித்தம் என்பால் வைக்க மாட்டீர்

ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்

ஓண காந்தன் தளியு ளீரே.

5


47.வாரி ருங்குழல் வாள்நெ டுங்கண்

மலைம கள்மது விம்மு கொன்றைத்

தாரி ருந்தட மார்பு நீங்காத்

தைய லாள்உல குய்ய வைத்த

காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க்

காமக் கோட்டம்உண் டாக நீர்போய்

ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே

ஓண காந்தன் தளியு ளீரே.

6

 

காமலே பாடியும், ஆடியும், மனம்நெகிழ்ந்து அழுதும், மற்றும் அவ்வாற்றால் அன்புடையராய் இருப்பவர்க்கு நன்மை செய்யு மாற்றினை நினைக்கின்றிலீர்; உம்மைக் காண வந்து பலவிடத்திலும் தேடித் தேடித் திரிந்தாலும், என்னிடத்தில் இரக்கம் வைத்துக் காட்சியளிக்கமாட்டீர்; கோயிலைவிட்டுப் போகவும் மாட்டீர்; கோயிலில் வந்து பாடுகின்ற எனக்குப் பற்றுக்கோடும் தரமாட்டீர்; (என் செய்வேன்!)

கு-ரை: 'தொண்டர் பாணி', 'கொண்ட பாணி' எனத் தனித்தனி இயையும். "தங்கள்" என்றது, சாரியை. "பாணி" ஆகுபெயர். தேடித் திரிந்தது, காணப்படாமையால். இஃது இறைவர்க்கு இயல்பாயினும், ஈயாமைப் பொருட்டுக் கரந்தாராக அருளினார். இத் திருப்பாடலும், ஏழாம் திருப்பாடலும் பற்றி, இத்தலத்தில் சுவாமிகள் சென்ற பொழுது, இறைவர் ஆங்குள்ளதொரு புளியமரத்தில் ஒளிந்து கொண்டதாகவும், அதனை அறிந்த சுவாமிகள் அங்குச் சென்று இத் திருப்பதிகத்தைப் பாட, இறைவர் அப்புளியமரத்தில் இருந்த காய்களைப் பொற்காய்களாக்கி உதிர்க்க, சுவாமிகள் அவற்றைப் பெற்று மகிழ்ந்ததாகவும் ஆங்குச் செவிவழி வழக்கு ஒன்று வழங்குகின்றது.

6. பொ-ரை: 'திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே. தேன் ததும்புங்கொன்றை மாலையை உடைய உமது பெரிய அகன்ற மார்பினின்றும் நீங்காத, நீண்ட கரிய கூந்தலையும், வாள்போலும் நெடிய கண்களையும் உடைய மலைமகளாகிய