பக்கம் எண் :

475
 
48. பொய்ம்மை யாலே போது போக்கிப்

புறத்தும் இல்லை அகத்தும் இல்லை

மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்

மேலை நாள்ஒன் றிடவுங் கில்லீர்

 

தேவி. உலக மெல்லாம் துன்பமின்றி வாழ்தற் பொருட்டு வைத்துள்ள சிறந்த அறச்சாலையாகிய, மேகம் தவழும் பெரிய சோலையையுடைய, 'கச்சி' என்னும் பழைய ஊரின்கண் உள்ள திருக்காமக் கோட்டம் இருக்க, நீர் சென்று, ஊரவர் இடும் பிச்சையை ஏற்பது ஏன்? 

கு-ரை : 'அடியேங்களாகிய எங்களுக்குக் கரத்தற் பொருட்டுத் தானோ?' என்பது கருத்து. 'கச்சியில் காமக்கண்ணியம்மை, காமக் கோட்டத்தில் எழுந்தருளியிருந்து, என்றும் முப்பத்திரண்டறங்களையும் வளர்க்கின்றாள்' என்பது புராண வரலாறு. இங்கு சுவாமிகள் அருளிச்செய்த இப்பொருளைக் குமரகுருபரர், தமது திருவாரூர் நான்மணி மாலையில்,

"புரவலர் புரத்தலும் இரவலர் இரத்தலும்
இருவே றியற்கையும் இவ்வுல குடைத்தே
அதா அன்று,
ஒருகா லத்தின் உருவமற் றொன்றே
இடப்பால் முப்பத் திரண்டறம் வளர்ப்ப
வலப்பால் இரத்தல் மாநிலத் தின்றே
..... ..... ..... ..... ...... ....... ...... ..... .....
பன்மணி மாடப் பொன்மதிற் கமலைக்
கடிநகர் வைப்பினிற் கண்டேம்
வடிவம் மற்றிது வாழிய பெரிதே"

என நயம்பட அருளினமை காண்க.

7. பொ-ரை: 'திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே. நீர் பொய்ச்சொல்லினாலே காலங் கழித்து, திருக்கோயிலின் புறத்தும் காணப்படீர்; அகத்தும் காணப்படீர். ஆகவே நீர் நும் அடியவரை மெய்சொல்லி ஆளமாட்டீர்போலும்! இனி, பின்வரும் நாள்களிலும் ஒன்றும் தரமாட்டீரேயாம்; ஏனெனில், எம்மை ஆளாகப் பெறுமளவும் விடாது வழக்காடுதல் அல்லது, பெற்றுவிட்டால் பின்பு எம்பால் ஒரு பணியையும் விரும்புகின்றிலீர். எவ்வாற்றான் நோக்கினும், நீர் எமக்கு யாதும் ஈகின்றவராயோ,