| எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர் | | ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர் | | உம்மை யன்றே எம்பெரு மான் | | ஓண காந்தன் தளியு ளீரே. | | 7 |
49. | வலையம் வைத்த கூற்ற மீவான் | | வந்து நின்ற வார்த்தை கேட்டுச் | | சிலைஅ மைத்த சிந்தை யாலே | | திருவ டீதொழு துய்யின் அல்லால் | | கலைஅ மைத்த காமச் செற்றக் | | குரோத லோப மதவ ரூடை | | உலைஅ மைத்திங் கொன்ற மாட்டேன் | | ஓண காந்தன் தளியு ளீரே. | | 8 |
யாதும் சொல்கின்றவராயோ தோன்றவில்லை. இந்நிலையில் நீர் எமக்குத் தலைவராய் இருத்தல், இப்பிறப்பு வந்தபின்னன்று; முற்பிறப்புத் தொட்டேயாம். கு-ரை: "பொய்ம்மை" என்றது, 'பிறவிடங்களிற் காணப்படா தொழியினும் திருக்கோயிலில் காணப்படுவேம்' என்று மறைகள் வாயிலாகச் சாற்றினமையை. 8. பொ-ரை: 'திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, எத்தகையோரையும் கொண்டு செல்ல, பாசத்தைக் கையிலே கொண்டுள்ள கூற்றுவன் வந்து வானத்தின்மேல் நின்ற செய்தியைக்கேட்டு, அடியேன், நீர் கற்போல அமைத்துத் தந்த அம் மனத்தைக் கொண்டே உமது திருவடியைத் தொழுது அக்கூற்றுவனுக்குத் தப்ப நினைக்கின்றேனேயன்றி, விதி அமைத்துத் தந்த ஐம்பொறிகளாகிய ஐந்து உலைக்களக் கூட்டத்தைப் பொருளாக உள்ளத்தமைத்து, 'காமம், மாற்சரியம், குரோதம், உலோபம், மதம்' என்பவரிடைப் பொருந்தி வாழ நினைக்கின்றிலேன். கு-ரை : 'இத்துணைப் பெரும்பேற்றை உம்பால் விரும்பும் எனக்கு நீர் சிறிது பொன்தானும் தாரீராகின்றீர்' எனக் குறிப்பெச்சம் வருவித்து, ஏனைய திருப்பாடல்களோடு இயைய இயைத்துக் கொள்க. 'வலையம் என்றது உவமையாகுபெயராய், வளையவீசும்
|