50. | வார மாகித் திருவ டிக்குப் | | பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே | | ஆரம் பாம்பு வாழ்வ தாரூர் | | ஒற்றி யூரேல் உம்ம தன்று | | தார மாகக் கங்கை யாளைச் | | சடையில் வைத்த அடிகேள் உந்தம் | | ஊரும் காடு உடையும் தோலே | | ஓண காந்தன் தளியு ளீரே. | | 9 |
பாசத்தைக் குறித்தது. 'மீவான்' என்றதனை. 'மீகண்' என்பதுபோலக் கொள்க. கலை - நூல். அஃது அதனுட் சொல்லப்படும் விதியைக் குறித்தது. 'கலை யமைத்த ஐ உலை' என இயையும். தாபத்தை உண்டாக்குதலின், ஐம்பொறியாகிய புழைகளை உலைக்களங்களாக உருவகித்தருளினார். "காமம்" என்பதுமுதல். "மதம்" என்றது காறும் உள்ளன, உம்மைத் தொகைபடத் தொக்கு ஒருசொல் நீர்மையவாய் இழித்தற்கண் வந்த உயர்திணை விகுதியை ஏற்றன. 'மதவரூடு ஒன்ற மாட்டேன்' என இயையும். 'மதவருடை' எனின் யாப்பு அமையாமையின், அதுபாடம் அன்றென்க. இதன்கண், பின் மூன்று வரிகளிலும், 'சிலையம் வைத்த' என்பனபோலவே பாடங்கள் சில உள. 9. பொ-ரை: 'திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, 'கங்கை' என்பவளைத்தாரமாகக் கொண்டு, இடமின்றிச் சடையில் வைத்துள்ள அடிகளே, நீர் மார்பில் அணியும் ஆரமாவது பாம்பு; வாழும் ஊர் உமக்கு உரிமையில்லாதது; 'ஒற்றியூர் உளதே' எனில் 'ஒற்றி' யெனவே, அஃது உம்முடையது அன்றாயிற்று. உமக்கு இல்லமாவது சுடுகாடு; உமது உடையாவது தோல். இங்ஙனமாதலின், உம்மிடத்து அன்புடையவராய் உம்திருவடிக்குத் தொண்டு செய்யும் அடியவர் உம்மிடத்தினின்றும் பெறுவது எதனை? கு-ரை: நகைப் பொருளிடத்து, 'ஆரூர்' என்பது வினாவாய் நின்று. 'உம்முடையதன்று' என்னும் விடையை இசையெச்சமாகத் தந்து நிற்கும். "வாழ்வது ஆரூர்" என முன்னர் வந்தமையின், பின்னர், 'ஊர்' என்றது இல்லமாயிற்று.
|