6. திருவெண்காடு
பதிக வரலாறு: சுந்தரர் திருச்சாய்க்காட்டீசரைப் பணிந்து போற்றித் திருவெண்காடு சென்று வணங்கிப் பாடிப் பரவியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 148.) குறிப்பு: இத் திருப்பதிகம், சிவபிரானை, தனது பெருமைக்கு ஏலாதன போலத் தோன்றும் கோலங்களை யுடைமைக்குக் காரணம் வினவு முகத்தால், அவை உலக நலத்தின் பொருட்டுக் கொண்டனவாதல் தோன்ற அருளிச்செய்தது. பண்: இந்தளம் பதிக எண்: 6 திருச்சிற்றம்பலம் 52. | படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப் | | பாய்பு லித்தோல் அரையில் வீக்கி | | அடங்க லார்ஊர் எரியச் சீறி | | அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர் | | மடங்க லானைச் செற்று கந்தீர் | | மனைகள் தோறுந் தலைகை யேந்தி | | விடங்க ராகித் திரிவ தென்னே | | வேலை சூழ்வெண் காட னீரே. | | 1 |
1. பொ-ரை: கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், படத்தையுடைய பாம்பைத் தலையிலே வைத்து, பாய்கின்ற புலியினது தோலை அரையிற் கட்டி, பகைவரது திரிபுரங்கள் எரிந்தொழியுமாறு வெகுண்டு, அந்நாளிற்றானே அவ்வூரிலுள்ள மூவருக்கு அருள் பண்ணினீர்; கூற்றுவனை முன்னர்க் கொன்று, பின்னர் உயிர்ப்பித்து, அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டீர்; இன்ன பெருமைகளையுடையீராய் இருந்தும், தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு, பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என்? கு-ரை: திரிபுரம் எரித்த ஞான்று, ஆங்கிருந்த அசுரர்களுள் புத்தன் போதனையால் சிவநெறியைக் கைவிடாதிருந்த மூவரைச் சிவபிரான் உய்யக்கொண்டு, ஒருவனைக் குடமுழா முழக்கு
|