53. | இழித்து கந்தீர் முன்னை வேடம் | | இமைய வர்க்கும் உரைகள் பேணா | | தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட | | வுயர்த வத்தை அமரர் வேண்ட | | அழிக்க வந்த காம வேளை | | அவனு டைய தாதை காண | | விழித்து கந்த வெற்றி யென்னே | | வேலை சூழ்வெண் காட னீரே. | | 2 |
பவனாகவும், இருவரை வாயில் காவலராகவும் கொண்டமையை, ஆறாந் திருமுறைக் குறிப்பில் விளக்கினோம். (தி. 6 ப. 60 பா. 9). இதனை இத் திருமுறையின் ஐம்பத்தைந்தாந் திருப்பதிகத்து எட்டாவது திருப்பாடலில் சுவாமிகள் இனிது விளக்குதல் காண்க. மடங்கல் - கூற்றுவன். 'எல்லா உயிர்களும் மடங்குதற்கு இடமானவன்' என்பது சொற் பொருள். இது, 'மடங்கலான்' என, பாலுணர்த்தும் ஈறுபெற்று நின்றது. 2. பொ-ரை: கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், அரி பிரமர்க்கும் அவரது முன்னை உடம்புகளை நீக்கி, அவற்றை விரும்பித் தோள்மேற் கொண்டீர்; 'என்றும் இறவாதபடி காப்பவன்' என்னும் புகழை விரும்பாது, எல்லாப் பொருள்களையும் அழித்தொழித்து, அதன்பின்னர் அவைகளை மீளத் தோன்றச் செய்தலை விரும்பினீர்; அங்ஙனமாக, நீர் முன்பு மேற்கொண்ட, மேலான தவத்தினை, தேவர் வேண்டிக்கொண்டமையால் அழித்தற்கு வந்த மன்மதனை, அவனுடைய தந்தையாகிய திருமால் ஒன்றும் செய்யமாட்டாது பார்த்துக் கொண்டிருக்க. நெற்றிக்கண்ணால் எரித்து, பின் உயிர்ப்பித்த வெற்றியை விரும்பியது என்? கு-ரை: இழித்தல் - இறக்குதல், "முன்", என்றது, சங்கார காலத்துக்கு முற்பட்ட காலத்தை. "இமையவர்" என்றது, தலைமை பற்றி, காரணக் கடவுளர்மேல் நின்றது. சிவபிரானது மோனநிலையை நீக்குமாறு தேவர்கள் மன்மதனை வேண்டி விடுக்க, அவன் அங்குச் சென்று அப்பெருமானால் எரிக்கப்பட்டு, பின்னர் அவன் தேவி வேண்டுகோட்கு இரங்கி அப்பெருமானாலே உயிர்ப்பிக்கப் பெற்றமையை, கந்த புராணத்துட் காண்க. 'எல்லா உலகங்களையும் ஒருநொடியில் அழிக்கவும் ஆக்கவும் வல்ல பேராற்றலையுடையீராகிய நீர், அவ்வாற்றலை ஒரு சிறுபிள்ளையிடத்துக் காட்ட நினைத்தது நுமக்குப்
|