| தேசம் எங்கும் தெளிந்தாடத் | | தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும் | | வாசந் திரைக்கா விரிக்கோட்டத் | | தையா றுடைய அடிகேளோ! | | 10 |
791. | கூடி அடியார் இருந்தாலும் | | குணமொன் றில்லீர் குறிப்பில்லீர் | | ஊடி இருந்தும் உணர்கிலேன் | | உம்மைத் தொண்டன் ஊரனேன் | | தேடி எங்குங் காண்கிலேன் | | திருவா ரூரே சிந்திப்பன் | | ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத் | | தையா றுடைய அடிகேளோ! | | 11 |
திருச்சிற்றம்பலம
்அலைகளையுடைய காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள், அடியார் தாம் தம் குறையைச் சொல்ல வெள்கியிருந்தாலும், நீரும் அவர்தம் குறையை அறிந்து தீர்க்கும் குணம் சிறிதும் இல்லீர்; அவ்வாறு தீர்த்தல் வேண்டும் என்னும் எண்ணமும் இல்லீர்; உம்மை, உலகிற்குத் தலைவனாகிய திருமாலும், தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் என்னும் இவர்தாமும் காண்கிலர்; பிறர் எங்ஙனங் காண்பார்! ஓலம்! கு-ரை: முன்னைத் திருப்பாடல்காறும் இறைவர் யாதும் அருளாமையின், இத் திருப்பாடலில் நம்பியாரூரர் அவரை இவ்வாறு நெருங்கி வேண்டினார் என்க. காத்தற்றொழில் உடைமைபற்றித் திருமாலை, ''தேச வேந்தன்'' என்று அருளினார். ''காண்கிலா'' என்பது பாடம் அன்று. 'பிறர் எங்ஙனங் காண்பார்' என்பது இசையெச்சம், அருவிகள் அலைவடிவாயினமையைக் குறிக்க, அவைகளை அலைகள் கொணர்ந்தனவாக அருளினார். வாசம் - வசித்தல், அதன்பின், 'உடைய' என்பது, தொகுத்தலாயிற்று. 11. பொ-ரை: அசைகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், அடியார் உம்மைவிட்டு நீங்காது கூடியே இருந்தாலும் நீர், அவர்க்கு அருள்பண்ணும் குணம் சிறிதும் இல்லீர், 'அருள் பண்ணுதல்
|