57. | மாறு பட்ட வனத்த கத்தின் | | மருவ வந்த வன்க ளிற்றைப் | | பீறி இட்ட மாகப் போர்த்தீர் | | பெய்ப லிக்கென் றில்லந் தோறுங் | | கூறு பட்ட கொடியும் நீருங் | | குலாவி யேற்றை அடர ஏறி | | வேறு பட்டுத் திரிவ தென்னே | | வேலை சூழ்வெண் காட னீரே. | | 6 |
58. | காத லாலே கருதுந் தொண்டர் | | கார ணத்த ராகி நின்றே | | பூதம் பாடப் புரிந்து நட்டம் | | புவனி யேத்த ஆட வல்லீர் | | நீதி யாக ஏழி லோசை | | நித்த ராகிச் சித்தர் சூழ | | வேத மோதித் திரிவ தென்னே | | வேலை சூழ்வெண் காட னீரே. | | 7 |
6. பொ-ரை: கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர் உம்மொடு மாறுபட்டு நின்ற, காட்டில் வாழப்பிறந்த, வலியகளிற்றை உரித்து, அதன் தோலை, விருப்பம் உண்டாகப் போர்த்தீர்; அன்ன வீரத்தை உடையீராயும், உமக்கு ஒரு கூறாகப் பொருந்திய மங்கையும் நீரும் எருதையே ஊர்தியாகச் செறிய ஊர்தலும், பிறர் இடுகின்ற பிச்சைக்கென்று இல்லந்தோறும் திரிதலும் செய்து, நுமது பெருமையினின்றும் வேறுபட்டு ஒழுகுதல் என்? கு-ரை : "வனத்தின் மருவ வந்த" என்றது இன அடை. "ஏறி" என்னும் எச்சம் எண்ணின்கண் வந்ததாகலின், இவ்வாறு உரைக்கப்பட்டது. 7. பொ-ரை: கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், உம்மை நினைக்கின்ற அடியார் நிமித்தமாக நின்று, பூதங்கள் பாட, உலகம் உயர்த்துக்கூறுமாறு, நடனத்தை விரும்பி ஆடவல்லீர்; அவ்வாறாகவும், உலகியல் விளங்குதற் பொருட்டு, யோகியர் சூழ, ஏழிசையின்வழி நிலைத்து நின்று, வேதத்தை ஓதித் திரிதல் என்? கு-ரை: 'நடனம் மெய்யுணர்வைத் தருவதாகலின், அதனை
|