59. | குரவு கொன்றை மதியம் மத்தங் | | கொங்கை மாதர் கங்கை நாகம | | விரவு கின்ற சடையு டையீர் | | விருத்த ரானீர் கருத்தில் உம்மைப் | | பரவும் என்மேற் பழிகள் போக்கீர் | | பாக மாய மங்கை அஞ்சி | | வெருவ வேழஞ் செற்ற தென்னே | | வேலை சூழ்வெண் காட னீரே. | | 8 |
60. | மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர் | | நிச்ச யத்தால் நினைப்பு ளார்பால் | | பாடுங் காட்டில் ஆடலுள்ளீர் | | பரவும் வண்ணம் எங்ங னேதான் |
மேற்கொண்டு செய்கின்ற நீர், உலகியல் நூலைப் பரப்பிக் கொண்டிருத்தல் என்னோ?' என்றவாறு. உயிர்களின் நிலை வேறுபாட்டிற்கேற்ப, இறைவன் பந்தத்தையும், வீட்டையும் தருபவனாய் நிற்றலை அருளிச் செய்தபடி. 8. பொ-ரை: கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், 'குரா மலர், கொன்றை மலர், ஊமத்த மலர், பிறை, தனங்களையுடைய நங்கையாகிய கங்கை, பாம்பு' ஆகிய எல்லாம் தலைமயங்கிக் கிடக்கின்ற சடையினை யுடையீர்; யாவர்க்கும் மூத்தீர்; அங்ஙனமாயினும், எஞ்ஞான்றும் உம்மையே கருத்தில் வைத்துப் பாடுகின்ற என்மேல் உள்ள பாவத்தைப் போக்கீராதலோடு, உமது பாகத்தில் உள்ள மங்கை மிகவும் அச்சங் கொள்ளுமாறு, யானையை உரித்துப் போர்த்தது என்? கு-ரை : 'குரவு முதலியன விரவுகின்ற சடையுடையீர்' என்றது, 'கங்கையும் பாம்பும் தம் ஆற்றல் மடங்கிப் பிறையோடு குரா முதலிய மலர்கள் போலக் கிடக்க வைத்த பேராற்றலுடையீர்' என்றபடி. "போக்கீர்" என்றதன்பின், 'அதனோடு' என்னும் சொல்லெச்சம் வருவிக்க. 'அடியவரைக் காக்கின்றிலீர்; மனைவியை அஞ்சப்பண்ணுகின்றீர்; இது தகுவதோ' என்பதாம். 9. பொ-ரை: கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், உம்மைத் தெளிந்த உள்ளத்துடன் நினைப்பவர்
|