பக்கம் எண் :

485
 
நாடுங் காட்டில் அயனும் மாலும்

நணுகா வண்ணம் அனலு மாய

வேடங் காட்டித் திரிவ தென்னே

வேலை சூழ்வெண் காட னீரே.

9

61. விரித்த வேதம் ஓத வல்லார்

வேலை சூழ்வெண் காடு மேய

விருத்த னாய வேதன் றன்னை

விரிபொ ழிற்றிரு நாவ லூரன்

அருத்தி யால்ஆ ரூரன் தொண்டன்

அடியன் கேட்ட மாலை பத்துந்

தெரித்த வண்ணம் மொழிய வல்லார்

செம்மை யாளர் வானு ளாரே.

10

திருச்சிற்றம்பலம்


முன்னே, உயர்ந்த மாளிகைகளையுடைய கச்சியம்பதியில் எழுந்தருளியுள்ளீர்; என்றாலும், பேய்கள் பாடும் காட்டில் ஆடலை உடையீர்; அதுவன்றியும், அயனும் மாலும் தமது தலைமையை ஆய்ந்து காணுதற்குக் கொண்ட சான்றிடத்து, அவர்கள் உம்மை அணுகாதவாறு தீப்பிழம்பாய் நின்ற வடிவத்தையே எங்கும் காட்டித் திரிவது என்? உம்மையாங்கள் வழிபடுவது எவ்வாறு?

கு-ரை : "நாடுங் காட்டில்" என்றதில் காட்டு - சான்று. காட்டில் ஆடுதல் உயர்வு தாராமையாலும், இருவராலும் அணுகப்படாமை காட்சிக்கு அரிய நிலையாதலாலும், "பரவும் வண்ணம் எங்ஙனே" என்று அருளினார். தான், அசைநிலை.

10. பொ-ரை: விரிவாகச் செய்யப்பட்டுள்ள வேதங்களை ஓத வல்லவர் வாழ்கின்ற, கடல் சூழ்ந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள, யாவர்க்கும் மூத்தோனாகிய அந்தணனை, அவனுக்குத் தொண்டனும், அவன் அடியார்க்கு அடியனும் அகன்ற சோலையையுடைய திருநாவலூரனும் ஆகிய நம்பியாரூரன் விருப்பத்தொடு சிலவற்றை வினவிச் செய்த, தமிழ்ச்சொற்களாலாகிய மாலை பத்தினையும், அவன் தெரித்துச் சொன்ன குறிப்பில் நின்று பாட வல்லவர், கோட்டம் நீங்கிய உணர்வினையுடையராய். சிவலோகத்தில் இருப்பவராவர்.

கு-ரை: 'ஓத வல்லார் வெண்காடு' என, வாழ்ச்சிக்கிழமைப் பொருளதாகிய ஆறாவதன் தொகையாக இயைக்க.