7. திருவெதிர்கொள்பாடி பதிக வரலாறு: சுந்தரர் கானாட்டு முள்ளூர் செல்லும் வழியில் இறைவன் காட்சி கொடுக்கக் கண்டு வணங்கி, திரு எதிர்கொள்பாடிக்குச் செல்லும் பொழுது பாடிப் பரவியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர் கோன். புரா. 120-121.) குறிப்பு : இத்திருப்பதிகம், உலகத்தினது நிலையாமையையும், துன்ப நிலையினையும் நெஞ்சிற்கு அறிவுறுத்தி, இறைவனை அடைய அழைத்து அருளிச்செய்தது. பண்: இந்தளம் பதிக எண்: 7 திருச்சிற்றம்பலம் 62. | மத்த யானை யேறி மன்னர் | | சூழ வருவீர்காள் | | செத்த போதில் ஆரு மில்லை | | சிந்தையுள் வைம்மின்கள் | | வைத்த உள்ளம் மாற்ற வேண்டா | | வம்மின் மனத்தீரே | | அத்தர் கோயில் எதிர்கொள்பாடி | | யென்ப தடைவோமே. | | 1 |
1. பொ-ரை: மதத்தையுடைய யானையின்மீது ஏறி சிற்றரசர்கள் புடைசூழ உலாவருகின்ற பேரரசர்களே, நீவிர் இறந்தால், அதுபோது உம்மோடு துணையாய் வருவார் இவர்களுள் ஒருவரும் இலர்; இறைவன் ஒருவனே அத்தகையனாய் உளன்; இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வைத்த மனத்தைப் பின் அந்நிலையினின்றும் வேறுபடுத்தி, மீள, இவ்வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா. என் நெஞ்சீரே, நீரும் வாரும்; அவர்களுடன், யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம். கு-ரை: தம் நெஞ்சிற்கு அறிவுறுத்தப் புகுந்தார், பேரருள்
|