பக்கம் எண் :

489
 
66. அரித்து நம்மேல் ஐவர் வந்திங்

காறலைப்பான் பொருட்டால்

சிரித்த பல்வாய் வெண்டலை போய்

ஊர்ப்புறஞ் சேராமுன்

வரிக்கொ டுத்தி வாள ரக்கர்

வஞ்சமதில் மூன்றும்

எரித்த வில்லி எதிர்கொள் பாடி

யென்ப தடைவோமே.

5

 

கு-ரை : கண்டீர், முன்னிலை யசை. "ஐவர்" என்றது, ஐம்புல ஆசையை. அஃது ஒன்றாயினும், புலன் வகையால், 'ஐந்து, எனப்படும், "வஞ்சம்" என்றது, தம்வழி நில்லாது அறைபோதலை. 'சிவபிரான், சுத்த மாயையைத் தொழிற்படுத்துமிடத்துத் தானே, 'அயன்' மால், உருத்திரன்' என்னும் மூன்று நிலைகளையும் உடையவனாய் நிற்பன்' என்பதும், அசுத்த மாயையின் கீழ் உள்ள பிரகிருதி மாயையைத் தொழிற்படுத்துமிடத்து, அத்தொழிலைப் பிறர்மாட்டு வைக்கும் ஆணையாற்றால், அந்நிலையைப் பெறும், மூவராயும் நிற்பன் என்பதும் சிவாகம நூல் துணிபு. எனினும், பிரகிருதி மாயையில் நின்று முத்தொழிலைச் செய்யும் மூவருள் உருத்திரன், ஏனை இருவர் போலச் சிவபிரானை மறந்து, தானே முதல்வன் என மயங்கித் தருக்குதல் இன்மையின், அவனை வேற்றுமைப்படுத்து ஓதுதல் திருமுறைகளுட் சிறுபான்மையேயாம். அவ்வாற்றான் ஈண்டும், முன்னர், "மூவராயும்" என்றும், பின்னர், "இருவராயும்" என்றும் அருளிச் செய்தார். "முதல்வன்", "அவன்" என்பன, பன்மை யொருமை மயக்கங்கள். 'முதல்வர் அவரேயாம்' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். "தேவர்" என்றது. ஈண்டு, 'முழுமுதற் கடவுள்' என்னும் பொருளது.

5. பொ-ரை: நெஞ்சீரே, ஐவர் ஆறலை கள்வர் நம்மேல் வந்து துன்புறுத்தி நன்னெறியின் இடையே அலைத்தலால் வாணாள் வீணாளாய்க் கழிய, மகிழ்ச்சியாற் சிரித்த பல்லினை உடைய வாய், வெண்டலையாய்ப் போய் ஊர்ப்புறத்திற் சேராத முன்பே, அழகினைக் கொண்ட படப்புள்ளிகளையுடைய பாம்பை அணிந்த, கொடிய அசுரரது பகைமை தங்கிய மதில்கள் மூன்றினையும் எரித்த வில்லையுடைய பெருமானது திருக்கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.