பக்கம் எண் :

490
 
67.பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர்

பொத்தடைப் பான்பொருட்டால்

மையல் கொண்டீர் எம்மொ டாடி

நீரும் மனத்தீரே

நைய வேண்டா இம்மை யேத்த

அம்மை நமக்கருளும்

ஐயர் கோயில் எதிர்கொள் பாடி

யென்ப தடைவோமே.

6

 கு-ரை : 'அலைப்பான்' என்பது, தொழிற்பெயர்ப் பொருளதாயும், 'பொருட்டு' என்றது, 'காரணம்' என்னும் பொருளதாயும் நின்றன.

வரி - அழகு. துத்தி - பாம்பின் படப்பொறி; அஃது இங்கு இருமடியாகுபெயராய், பாம்பையே உணர்த்திற்று. "வரிக்கொள்" என்றதில் ககர மெய், விரித்தல். அசுரர் கொண்ட பகைமை, அவரது மதில் மேல் ஏற்றப்பட்டது.

6. பொ-ரை: நெஞ்சீரே, நம் இல்வாழ்க்கையை ஆளுதலுடைய சுற்றத்தார், நம்மீது நிலையற்ற அன்புடையரே; அதனை நினையாது, அவர்கள் குறையை முடித்தற் பொருட்டு நீரும் எம்மொடு கூடித் திரிந்து, மயக்கத்தையுடையீராயினீர்; இனி, அவ்வாற்றால் துன்புறுதல் வேண்டா; இப்பிறப்பில் நாம் வழிபட்டிருக்க, வருகின்ற பிறப்பில் வந்து நமக்கு அருள் பண்ணும் நம் பெருமானது திருக்கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.

கு-ரை : கண்டீர், முன்னிலை யசை. பொத்து - பொத்தல்; பொள்ளல்; என்றது, குறையை. 'அவர் பொத்து' என எடுத்துக் கொண்டு உரைக்க. 'எம்மொடாடி மையல்கொண்டீர்' என்றாராயினும், 'எம்மொடு மையல் கொண்டு ஆடினீர்' என்பது திருவுள்ளம் என்க. உயிர் எந்நிலையில் நின்றது. உள்ளமும் அந்நிலையதாம் ஆதலின், இவ்வாறு அருளப்பட்டது. இவ்வுண்மையைச் சிவப்பிரகாசத்தின் எழுபதாஞ் செய்யுளால் அறிக. "நீரும்" என்னும் உம்மை, இறந்தது தழுவிற்று. "அம்மை நமக்கருளும் ஐயர்" என்றது, ஏனையோர் அது மாட்டார் என்பது உணர்த்தற் பொருட்டு.