பக்கம் எண் :

491
 
68. கூச னீக்கிக் குற்றம் நீக்கிச்

செற்ற மனம்நீக்கி

வாச மல்கு குழலி னார்கள்

வஞ்ச மனைவாழ்க்கை

ஆசை நீக்கி அன்பு சேர்த்தி

என்பணிந் தேறேறும்

ஈசர் கோயில் எதிர்கொள் பாடி

யென்ப தடைவோமே. 

7

69. இன்ப முண்டேல் துன்ப முண்டு

ஏழை மனைவாழ்க்கை

முன்பு சொன்னால் மோழை மையாம்

முட்டை மனத்தீரே

அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை

யடிகளடி சேரார்

என்பர் கோயில் எதிர்கொள் பாடி

யென்ப தடைவோமே.

8



7. பொ-ரை: நெஞ்சே, கும்பிட்டுக் கூத்தாடக் கூசுதலை ஒழித்து, காமம் வெகுளி முதலிய குற்றங்களை அகற்றி, யாரிடத்தும் பகை கொள்ளுதலைத் தவிர்த்து, மணம் நிறைந்த கூந்தலையுடைய மகளிரது, வஞ்சனையையுடைய மனைவாழ்க்கையில் உள்ள ஆசையைத் துறந்து எலும்பை அணிதலோடு, விடையை ஊரும் இறைவரது திருக்கோயிலை அவரிடத்து அன்பு வைத்து. 'திரு எதிர் கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; அதுவே செயற்பாலது; வா.

கு-ரை : 'கூசம் நீக்கி' என்பதும் பாடம். "மனம்" என்றது அண்மை விளி. 'குழலினார்களது மனைவாழ்க்கை' என்க. மகளிர் இல்லையேல் இல்லையாதல் பற்றி, மனைவாழ்க்கையை அவருடைய தாக்கி யருளினார். வஞ்சனையாவது, பிழைத்துப் போக வொட்டாது தன்னிடத்தே அகப்பட்டுக் கிடக்குமாறு தளைத்து நிற்றல்.

8. பொ-ரை: பொறியொன்றும் இல்லாத முட்டைபோலும் நெஞ்சீரே, அறியாமையால் வரும் மனை வாழ்க்கையில் இன்பம் உள்ளதுபோலவே துன்பமும் உளதாதல் கண்கூடு; 'அழகிய கொன்றை