பக்கம் எண் :

492
 
70.தந்தை யாருந் தவ்வை யாரு

மெட்டனைச் சார்வாகார்

வந்து நம்மோ டுள்ள ளாவி

வான நெறிகாட்டும

சிந்தை யீரே னெஞ்சி னீரே

திகழ்மதி யஞ்சூடும்

எந்தை கோயில் எதிர்கொள் பாடி

யென்ப தடைவோமே.

9



மாலையை அணிந்த இறைவரது திருவடிகளை, அவற்றிற்கு அன்பராய் உள்ளவரல்லது அடையமாட்டார்' என்று, அறிந்தோர் கூறுவர்; இவற்றை முன்பு உமக்குச் சொன்னால் நீர் உணரமாட்டாமையின், அறியாமயாய் முடியும்; ஆதலாற் சொன்னோமில்லை. இனி மனை வாழ்க்கையைக் கைவிட்டு, இறைவரது திருக்கோயிலை, 'திருஎதிர் கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.

கு-ரை: "இன்பம் உண்டேல்" என்ற, 'செயின்' என்னும் எச்சம், "நீரின் றமையா துலகெனின்" (குறள் - 20.) என்பதிற்போலத் தெளிவின்கண் வந்தது.

"உண்டு ஏழை" என்புழிக் குற்றியலுகரம் கெடாது நின்றது. "முன்பு" என்றது, இறைவனால் ஆட்கொள்ளப்படாத காலத்தை. மோழை புரையாகலின், மோழைமை அறிவின்மை யாயிற்று; "போத்தறார் புல்லறிவினார்" (நாலடி - 351.) என, அறி வின்மை, 'பொத்து' எனப்படுதல் காண்க.

'முன்பு சொன்ன மோழை மையான்' எனவும் பாடம் ஓதுவர். பின்னர், "என்பர்" என உரை யளவையைக் கூறினமையால், முன்னர்க் காட்சியளவை கூறுதல் பெறப்பட்டது. "கொன்றையடிகள்" என முன்னே வந்தமையின். "கோயில்" என வாளாதே அருளிப் போயினார்.

9. பொ-ரை: நெஞ்சீரே, தந்தையாரும் தமக்கையாரும் நமக்கு எள்ளளவும் துணையாகமாட்டார்; ஆதலின், நீர் எம்பால் வந்து உள்ளாய்க் கலந்து உசாவி, எமக்கு வீட்டு நெறியைக் காட்டும் நினைவுடையீராயின், விளங்குகின்ற திங்களைச் சூடும் நம் தந்தை