பக்கம் எண் :

493
 
71. குருதி சோர ஆனையின் தோல்

கொண்ட குழற்சடையன்

மருது கீறி ஊடு போன

மாலய னும்அறியாச்

சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச்

சோதியெம் மாதியான்

கருது கோயில் எதிர்கொள் பாடி

யென்ப தடைவோமே.

10



கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.

கு-ரை: "தந்தையாரும் தவ்வையாரும்" என்றது அணுக்கராய உறவினர்க்குச் சிலரை எடுத்தோதியவாறு.

'நாம்' என்பது, 'யாம்' என்னும் பொருளிலும் வருதல் உண்டென்க. 'சிந்தையீரே' என்பது பிழைபட்ட பாடம்.

10. பொ-ரை: நெஞ்சீரே, யானையின் தோலை உதிரம் ஒழுகப் போர்த்த, குழல்போலும் சடையை உடையவனும், இருமருத மரங்களை முரித்து, அவற்றின் இடையே தவழ்ந்த மாயோனும், பிரமனும் காணாத, வேதத்தை உணர்ந்தோர்க்கும் சொல்ல ஒண்ணாத ஒளி வடிவினனும், எங்கள் முதல்வனும் ஆகிய சிவபிரான் தன் இடமாக விரும்புகின்ற திருக்கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; அதுவே செயற்பாலது; வாரீர்.

கு-ரை: குழல், மகளிர் கூந்தலை முடிக்கும் வகைகளுள் ஒன்று. 'மாயோன் கண்ணனாய்ப் பிறந்து ஆயர் பாடியில் வளருங்கால், தன் தாய் தன்னைப் பிணித்திருந்த உரலுடனே' தவழ்ந்து, துருவாச முனிவரது சாபத்தால், 'நளன் கூபரன்' என்னும் இருவர்தம் பிறப்பு வேறுபட்டு ஆங்கு வந்து தோன்றி வளர்ந்திருந்த இருமருத மரங்களின் இடையே சென்று அவற்றை முரிக்க, அவர் அச்சாபம் நீங்கினர்' என்பது புராணம், 'அறியா, ஒண்ணா' என்னும் பெயரெச்ச மறைகள் இரண்டும், "சோதி" என்றதனோடு தனித் தனி முடிந்தன.