8. திருவாரூர் பதிக வரலாறு: சுந்தரர் சேரர்பெருமானுடன் பாம்பணிமாநகரில் திருப்பாதாளீச்சுரரை வணங்கி அருகில் உள்ள பல பதிகளையும் தொழுது திருவாரூர் வந்தணைந்தார். திருவாரூரில் வாழ்வார்கள் எதிர்கொள்ளத் திருக்கோயில் சென்று பாடியருளியதாகலாம் இத் திருப்பதிகம். (தி. 12 கழறிற்றறிவார் புரா. 122.) பண்: இந்தளம் பதிக எண்: 8
திருச்சிற்றம்பலம் 73. | இறைகளோ டிசைந்த இன்பம் | | இன்பத்தோ டிசைந்த வாழ்வு | | பறைகிழித் தனைய போர்வை | | பற்றியான் நோக்கி னேற்குத் | | திறைகொணர்ந் தீண்டித் தேவர் | | செம்பொனும் மணியுந் தூவி | | அறைகழல் இறைஞ்சும் ஆரூர் | | அப்பனே அஞ்சி னேனே. | | 1 |
1. பொ-ரை: தேவர்கள், செம்பொன்னையும், மணிகளையும் திறையாகக் கொணர்ந்து திரண்டு வந்து, நினது ஒலிக்கும் கழலையணிந்த திருவடிகளை, மலர் தூவி வணங்குகின்ற, திருவாரூரில் உள்ள தந்தையே, பறையைக் கிழித்தாற்போன்ற உடம்பைப் பற்றிநின்று பார்த்தேனாகிய எனக்கு, அவ்விடத்துச் சிறுபொருள்களோடு பொருந்திவந்த இன்பத்தையும், அவ்வின்பத்தோடு பொருந்தி நிகழ்ந்த இல்வாழ்க்கையையும் அஞ்சு தலுடையனாயினேன். கு-ரை: 'அவ்வச்சத்தை நீக்கியருள்' என்பது குறிப்பெச்சம். "வாழ்வு" என்றதன்பின் தொகுக்கப்பட்ட செவ்வெண்ணின் தொகைப் பொருளதாகிய இவற்றை என்பது விரித்து, அதனை, 'அஞ்சினேன்' என்பதனோடு முடிக்க. சிறுமையாவது, நிலையின்மை. அதனையுடைய பொருள்களால் விளையும் இன்பத்திலும், முன்னும் பின்னும் உளதாந் துன்பமே
|