பக்கம் எண் :

496
 
74.ஊன்மிசை உதிரக் குப்பை

ஒருபொரு ளிலாத மாயம்

மானமறித் தனைய நோக்கின்

மடந்தைமார் மதிக்கும் இந்த

மானுடப் பிறவி வாழ்வு

வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்

ஆனல்வெள் ளேற்ற ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.

2



பெரிதாதலாலும், அவ்வின்பத்தின் பொருட்டுக் கொள்ளப்படும் இல்வாழ்க்கை அல்லல் பெரிதுடைத்தாதலாலும், அவை அஞ்சப் படுவனவாயின. தோலாற் போர்க்கப் படுதலின், உடம்பு பறையோடு ஒப்பதாயினும், பறை பொள்ளலுடையது அன்மையின், பொள்ளல் பலவுடைய உடம்பை, கிழிந்த பறை யோடு உவமித்தருளினார்.

'நோக்கியேன்' என்னும் பெயர் 'யான்' என்னும் பொதுப்பெயரின் பொதுமை நீக்குதலின் 'யான் நோக்கி னேற்கு' என்பதற்கு, நோக்கினேனாகிய எனக்கு என்று உரைத்தல் பொருந்துவதாயிற்று. இன்னோரன்னவை இவ்வாறு பொருள் படுதலை, கலித் தொகை, திருவாசகங்களிற் காண்க. 'நோக்கினேற்கு' என்பது, 'இசைந்த' என்பவற்றோடு முடியும்.

2. பொ-ரை: வெள்ளிய நல்ல ஆனேற்றையுடையவனே, திருவாரூரில் உள்ள தந்தையே, இறைச்சியை உள்ளடக்கி ஓடுகின்ற குருதிக்குப் பையாய் உள்ள இவ்வுடம்பு, பொருட்டன்மையாகிய உண்மையை உடைத்தல்லாத பொய்ப்பொருள்; ஆதலின், அத்தன்மையை அறியாத, மான் மருண்டாற் போலும் பார்வையினையுடைய பெண்டிரே மதிக்கின்ற இந்த மானிடப்பிறவி வாழ்வினை, இன்புற்று வாழ்வதொரு வாழ்வாக விரும்புகின்றிலேன்; அத்துன்ப நிலைக்கு அஞ்சுதலுடையனாயினேன்.

கு-ரை: 'அதனை நீக்கியருள்' என்பது குறிப்பெச்சம். 'உதிரத்துக்கு என்னும் அத்துச் சாரியை தொக்கு, 'நிலக்கு' (குறள் - 570.) என்பது போல 'உதிரக்கு' என நின்றது.

இவ்வாறன்றிக் 'குப்பை' என இயல்பாகவே கொண்டு உரைத்தல் பொருந்தாமை அறிக.