பக்கம் எண் :

497
 
75.அறுபதும் பத்தும் எட்டும்

ஆறினோ டஞ்சும் நான்கும்

துறுபறித் தனைய நோக்கிச்

சொல்லிற்றொன் றாகச் சொல்லார்

நறுமலர்ப் பூவும் நீரும்

நாள்தொறும் வணங்கு வாருக்

கறிவினைக் கொடுக்கும் ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.

3


76.சொல்லிடில் எல்லை யில்லை

சுவையிலாப் பேதை வாழ்வு

நல்லதோர் கூரை புக்கு

நலமிக அறிந்தே னல்லேன்

3. பொ-ரை: மணம் கமழும் பூவும், நீருங் கொண்டு உன்னை நாள் தோறும் வழிபடுவார்க்கு மெய்யுணர்வைத் தருகின்ற, திருவாரூரில் உள்ள தந்தையே, பூதங்கள் ஐந்தும், ஞானேந்திரியம் கன்மேந் திரியம் என்னும் இந்திரியங்கள் பத்தும், தன்மாத்திரை ஐந்து அந்தக்கரணம் மூன்று என்னும் நுண்ணுடம்புறுப்புக்கள் எட்டும், தாத்துவிகங்கள் அறுபதும், 'காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன்' என்னும் வித்தியா தத்துவங்களாகிய ஆறும், 'சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி' என்னும் ஆகிய எல்லாம் புதராக, வேறாகக் கண்டு சொல்லின். அவற்றை அறிவுடைய தம்மியல்பாக ஒருவருங் கூறார்; ஆதலின், தம்மை, யானாகவே மயங்கும் வண்ணம் என் இயல்பை மறைத்து நிற்கின்ற அவற்றிற்கு அடியேன் அஞ்சுதலுடைய னாயினேன்.

கு-ரை: 'அவற்றை நீக்கியருள்' என்பது குறிப்பெச்சம், தத்துவ தாத்துவிகங்களை அவற்றின் முறைபற்றிவையாது, செய்யுளுக்கேற்ப வைத்தருளினார். அந்தக் கரணங்களுள் சித்தம் பிரகிருதியேயாகலானும், புருடன் தனித் தத்துவம் அன்றாதலானும், அவற்றை வேறு வைத்தெண்ணாமையும், சுத்த தத்துவங்களை ஐந்தென்னாது, 'நான்கு, மூன்று' என்றலும் மெய்ந்நூல் வழக்காதலும் அறிக. இவ்வாறன்றி, 'அஞ்சு நான்கும்' என்று பாடமோதி அதனை, இருபதெனக் கொண்டு, எட்டும் என்பதனைப் பெயரெச்சமாக்கி, தொண்ணூற்றாறு என்னுந் தொகை வர உரைப்பாரும் உளர்.

4. பொ-ரை: மேல் மாடங்கள் உயர்ந்துள்ள இடங்களிலெல்லாம், வண்டுகள் மல்லிகை மலரின் அகவிதழில் வீழ்ந்துகிண்டுகின்ற