| மல்லிகை மாட நீடு | | மருங்கொடு நெருங்கி யெங்கும் | | அல்லிவண் டியங்கும் ஆரூர் | | அப்பனே அஞ்சி னேனே. | | 4 |
77. | நரம்பினோ டெலும்பு கட்டி | | நசையினோ டிசைவொன் றில்லாக் | | குரம்பைவாய்க் குடியி ருந்து | | குலத்தினால் வாழ மாட்டேன் | | விரும்பிய கமழும் புன்னை | | மாதவித் தொகுதி யென்றும் | | அரும்புவாய் மலரும் ஆரூர் | | அப்பனே அஞ்சி னேனே. | | 5 |
திருவாரூரில் உள்ள தந்தையே, யான், ஓட்டைக்குடில்களுள் துச்சிலிருந்துவாழ்ந்த, பேதைக்குரித்தாய, துன்பமே நிறைந்த வாழ்க்கைகளைச் சொல்லப்புகின், அவற்றிற்கு ஓர் எல்லை இல்லை. அங்ஙனமாகவும், நல்லதொரு புக்கிலுட் குடிபுகுந்து இன்பம் மிக வாழும் நெறியினை அறிந்திலேன்; அதனால், அஞ்சுதலுடையனாயினேன். கு-ரை: 'அவ்வச்சத்தை நீக்கி, அந்நெறியினை அறிவித்தருள்' என்பது குறிப்பெச்சம், 'கூரை' என்றது ஆகுபெயராய் இல்லத்தை உணர்த்திற்று. ஓட்டைக் குடில் என்பது உடம்பினையும். நல்லதோர் இல் என்பது வீட்டு நிலையையுமாம். புகுந்து என்றதனால், அது புக்கிலாயிற்று. 'நல்லதொரு புக்கிலை அறிந்திலேன்' என்றதனால், ஓட்டையாகிய இல்லத்துள் ஒதுங்கியிருத்தல் பெறப்பட்டது. "புக்கிலமைந்தின்று கொல்லோ உடம்பினுள், துச்சிலிருந்த உயிர்க்கு" என்பதனை (குறள் - 340.) விரித்தருளியபடி 'மருங்கொடு நெருங்கி' என்றதனை, 'மலையொடு பொருத' என்பது போலக் கொள்க. 'அல்லி வண்டியங்கும் ஆரூரப்பனே' என்றது, 'நின் ஊருள் வண்டுகள் தாமும் நன்கு உண்டு களித்து வாழாநிற்க, அடியனேன் அச்சுற்று வருந்தா நின்றேன்' என்னும் இறைச்சிப்பொருளைத் தோற்றுவித்தது. 5. பொ-ரை: புன்னையும் மாதவியுமாகிய அவற்றையுடைய சோலைக்கண். யாவரும் விரும்புமாறு மணங்கமழ்கின்ற பேரரும்புகள் எந்நாளும் வாய்மலர்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, அடியேன்,
|