78. | மணமென மகிழ்வர் முன்னே | | மக்கள்தாய் தந்தை சுற்றம் | | பிணமெனச் சுடுவர் பேர்த்தே | | பிறவியை வேண்டேன் நாயேன் | | பணையிடைச் சோலைதோறும் | | பைம்பொழில் விளாகத் தெங்கள் | | அணைவினைக் கொடுக்கும் ஆரூர் | | அப்பனே அஞ்சி னேனே. | | 6 |
எலும்புகளை நரம்பாற் கட்டின, விருப்பத்தோடு சிறிதும் இசைவில்லாத (அருவருப்பைத் தருவதான) குடிசைக்கண் குடியிருத்தலால், நன்மாளிகையில் வாழும் உயர்ந்தார் நடுவுள்ளிருந்து வாழ இயலாதவனாயுள்ளேன்; அதனால், அஞ்சுதலுடையனாயினேன். கு-ரை: 'அவ்வச்சத்தை நீக்கி உயர்ந்தார் நடுவுள்ளிருந்து வாழ அருள்செய்' என்பது குறிப்பெச்சம். 'கட்டிய' என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று. "நரம்பினோடு கட்டிய" என்றது 'ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்' என்றாற் போல நின்றது. குரம்பை என்றது உடம்பினை. 'குலம்' உயர்ந்தாரது தொகுதி. குலத்தினாலென்னும் ஆனுருபு ஒடு உருபின் பொருளில் வந்தது. உயர்ந்தார் என்பது வெளிப்படைப் பொருளில் செல்வரையும், குறிப்புப் பொருளில் வீடு பெற்றாரையும் குறித்தன. இழிந்த சேரிக்கண் வாழ்வார், உயர்ந்த மாடத் தெருவிலுள்ளாரோடு வாழ்தல் இயலாதது போலும் நிலையை உடையேன் என்றபடி. 6. பொ-ரை: வயல்களின் நடுவேயுள்ள சோலைகளிலெல்லாம், பசிய இளமரக்காக்களை உடைய விளையாடுமிடங்களில், மக்கட்குத் தங்குமிடங்களைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, உலகில் தாய், தந்தை, சுற்றத்தார் என்போர் முன்பு (இளமையில்) தம் மக்கட்குத் திருமணம் நிகழாநின்றது என மகிழ்வார்கள். பின்பு அவர்தாமே அவர்களை, 'பிணம்' என்று சொல்லி ஊரினின்றும் அகற்றிப் புறங்காட்டிற் கொண்டுபோய் எரிப்படுத்து நீங்குவர்; ஆதலின், இத்தன்மைத்தாகிய பிறவியை அடியேன் விரும்புகின்றிலேன்: அதன்கண் வீழ்தற்கு அஞ்சுதலுடையனாயினேன். கு-ரை: 'மக்கட்கு' என்புழித் தொகுக்கப்பட்ட நான்கனுருபை விரித்து 'மணம்' என்பதனோடு இயைக்க. 'தாய், தந்தை, சுற்றம்'
|