பக்கம் எண் :

500
 
79.தாழ்வெனுந் தன்மை விட்டுத்

தனத்தையே மனத்தில் வைத்து

வாழ்வதே கருதித் தொண்டர்

மறுமைக்கொன் றீய கில்லார்

ஆழ்குழிப் பட்ட போது

அலக்கணில் ஒருவர்க் காவர்

யாழ்முயன் றிருக்கும் ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.

7

80. உதிரநீர் இறைச்சிக் குப்பை

எடுத்தது மலக்கு கைம்மேல்

வருவதோர் மாயக் கூரை

வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்



என்பது தாப்பிசையாய் முன்னும் பின்னும் இயைந்தது' 'வளாகம்' என்பது 'விளாகம்' என மருவிற்று. 'அணைவு' என்பது ஆகுபெயராய், அணையப்படும் இடத்தைக் குறித்தது.

7. பொ-ரை: மக்கள் யாழிசைத்து இன்புற்றிருக்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, உலகத்தார் பொருள் ஒன்றனையே பெரிதாக மனத்துட்கொண்டு, அதனால் பெருமையுடன் வாழ்வதையே விரும்பி, பணிவு என்னும் பெருந்தன்மையை விட்டு, மறுமை நலத்தின் பொருட்டு வறியார்க்கு ஒன்று ஈதலை இலராகியே வாழ்வர்; துன்பத்துள் அகப்பட்டவர்க்கு அப்போது உதவியாய் நில்லாது, துன்பமின்றி இன்புற்றிருக்கின்ற மற்றொருவருக்கு உதவியாவர். அவரது தன்மையைக் கண்டு அவரொடு கூடி வாழ்வதற்கு அஞ்சுதலுடையனாயினேன்.

கு-ரை: தொண்டர் என்பது இழித்தற் குறிப்பு.

8. பொ-ரை: கருமை நிறத்தையுடைய திருமாலும், பிரமனும் தேடித் திருவடியைக் காணமாட்டாத அருமையையுடையோனாய் நின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண் குவியலைக் கொண்டு எடுத்ததாகிய மலக் குகையின்மேல் காணப்படுவதாகிய, விரையக்கெடும் தோலாகிய கூரையினுள்ளே வாழ்வதாகிய இழிந்த வாழ்க்கையை அடியேன்