பக்கம் எண் :

501
 
கரியமா லயனுந் தேடிக் கழலிணை

காண மாட்டா

அரியனாய் நின்ற ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.

8

81.பொய்த்தன்மைத் தாய மாயப்

போர்வையை மெய்யென் றெண்ணும்

வித்தகத் தாய வாழ்வு

வேண்டிநான் விரும்ப கில்லேன்

முத்தினைத் தொழுது நாளும்

முடிகளால் வணங்கு வாருக்

கத்தன்மைத் தாகும் ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.

9



விரும்புகின்றிலேன். அதனது தீமைகள் பலவும் அறிந்து அதற்கு அஞ்சுதலுடையனாயினேன்.

கு-ரை: 'குகைம் மேல்' என்னும் மகரமெய் விரித்தல். 'கூரை' என்புழி, உள்ளென்னும் பொருள்படுவதாகிய கண்ணுருபு விரிக்க.

9. பொ-ரை: முத்துப்போல அரிதிற் கிடைக்கும் நின்னை நாள் தோறும் தொழுது, தலையால் வணங்கும் அன்பர்கட்கு அத்தன்மையதாகிய சிறந்த பொருளாய் நின்று பெரும்பயனைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, நிலையாத தன்மையையுடைய உடம்பை நிலையுடையதாகக் கருதும் சதுரப்பாட்டினை யுடையதாகிய இவ்வுலக வாழ்க்கையை அடியேன் இன்றியமையாததாக நினைத்து விரும்பும் தன்மையில்லேன்; அதற்கு, அஞ்சுதலுடையனாயினேன்.

கு-ரை: 'முத்தினை என்பதில் ஐகாரம் முன்னிலையுணர்த்திற்று. அஃது உயர்திணைமேல் நின்றமையின் இரண்டாவதன் தொகைக்கண் தகரம் மிக்கது. இவ்வாறன்றி ஐகாரத்தை இரண்டனுருபு என்றே கொண்டு "முத்து" என்றது முன்னிலைக்கண் படர்க்கை வந்த இடவழுவமைதியாகக் கூறுதலும் ஆம். 'அத்தன்மைத்து' என்றது, அத்தன்மைத்தாய பொருள் எனப் பொருள் தந்தது. 'மாயப் போர்வை' என்றது வாளா பெயராய், உடம்பு என்னும் அளவாய் நின்றது. உடம்பு நிலையாததாயினும், அதனை நிலைத்ததாகக் கருதினாலல்லது உலக வாழ்க்கையை நடத்தலாகாமையின், "மாயப் போர்வையை