9. திருவரிசிற்கரைப்புத்தூர் பதிக வரலாறு: நாயனார் திருவாஞ்சியமும் நறையூர்ச் சித்தீச்சரமும் பணிந்து திருஅரிசிற்கரைப்புத்தூரிறைவரைப் போற்றிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 ஏயர்கோன். புரா.61) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவனது பொருள் சேர்ந்த புகழைப் பலவாற்றாலும் எடுத்தோதியருளியது. இஃது இத் திருமுறையுள் ஐந்தாந் திருப்பதிகமாயிருந்து, பிற்காலத்துப் பிறழக் கோக்கப்பட்டது போலும்!
பண்: இந்தளம் பதிக எண்: 9 திருச்சிற்றம்பலம் 83. | மலைக்கும்மக ளஞ்ச மதகரியை | | உரித்தீர்எரித் தீர்வரு முப்புரங்கள் | | சிலைக்குங்கொலைச் சேவுகந் தேறொழியீர் | | சில்பலிக்கில்கள் தோறுஞ் செலவொழியீர் | | கலைக்கொம்புங் கரிமருப் பும்மிடறிக் | | கலவம்மயிற் பீலியுங் காரகிலும் | | அலைக்கும்புனல் சேரரி சிற்றென்கரை | | அழகார்திருப் புத்தூர் அழகனீரே. | | 1 |
1. பொ-ரை: மான்களின் கொம்புகளையும், யானையின் தந்தங்களையும் எடுத்தெறிந்து, தோகையையுடைய மயிலினது இறகுகளையும், கரிய அகிற்கட்டைகளையும் அலையப்பண்ணுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே! நீர் இமயமலைக்கு மகளாகிய உம் தேவி அச்சங்கொள்ளும்படி மதம் பொருந்திய யானையை உரித்தீர்; பெயர்ந்து வந்து எதிர்த்த மூன்று நகரங்களை எரித்தீர்; முழங்குகின்ற, கொல்லுந் தொழிலையுடைய காளையை விரும்பி ஏறுதலை விடமாட்டீர்; சிலவகையான பிச்சைக்கு இல்லங்கள் தோறும் செல்லுதலையும் நீங்கமாட்டீர். கு-ரை: ‘இது நும் பெருமை’ என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. வருகின்ற திருப்பாடல்களிலும் இவ்வாறே முடிக்க. ‘மலைக்
|