பக்கம் எண் :

504
 
84. அருமல ரோன்சிரம் ஒன்றறுத்தீர்

செறுத்தீர் அழற் சூலத்தில் அந்தகனைத்

திருமகள் கோனெடு மால்பலநாள்

சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்

ஒருமலர் ஆயிரத் திற்குறைவா

நிறைவாகவோர் கண்மலர் சூட்டலுமே

பொருவிறல் ஆழி புரிந்தளித்தீர்

பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே. 

2



கும் மகள்’, ‘கலவம் மயில்’ என்னும் மகர ஒற்றுக்கள் விரித்தல். இத்திருப்பதிகங்களுள் இவ்வாறு வரும் விரித்தல் விகாரங்களை அறிந்துகொள்க. ஏறு, முதனிலைத் தொழிற்பெயர். ‘ஏற்றொழியீர்’ என்பதும் பாடம். சில்பலி, ஒரு பொருளன்றி, வேறு வேறு பொருள்களையும் ஏற்றல்.

2. பொ-ரை: சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், அரிதாகிய தாமரைமலரின்கண் இருக்கும் பிரமதேவனது தலையொன்றை அறுத்தீர்; நெருப்பை வீசும் சூலத்தினால் அந்தகாசுரனை அழித்தீர்; திருமட்குத் தலைவனாகிய நீண்ட வடிவினைக் கொண்ட திருமால் உமக்குப் பலநாள் சிறப்பாய் உள்ள வழிபாட்டினைச் செய்து வரும் நாள்களில் ஒருநாள், அவன் சாத்துகின்ற ஆயிரந் தாமரை மலர்களுள் ஒன்று குறைவாகி மறைய, அது நிறைவாகும்படி, தனது கண்ணாகிய மலரைப்பறித்துச் சாத்த மகிழ்ந்து, போரின்கண் வெற்றியைத் தருகின்ற சக்கரப் படையை அருளினீர்.

கு-ரை: இரணியாட்சன் மகனாகிய அந்தகாசுரன் என்பவன், தான் தவம் செய்து பெற்ற வரத்தினையுடையவனாகித் திருமால் முதலிய தேவர்கள் அனைவரையும் துன்புறுத்த, அவர்கள் அவனுக்கு ஆற்றாது பெண்டிர் வடிவங்கொண்டு ஓடித் திருக்கயிலையில் இறைவியின் கணங்களோடு இருந்தனர். அங்கும் அந்த அசுரன் அவர்களைத் துன்புறுத்தச் சென்றபொழுது தேவர்கள் வேண்டிக்கொள்ள சிவபெருமானார் வைரவரை அனுப்பி, அவரது சூலத்தால் அவனை அழிக்கச் செய்தனர் என்பது புராண வரலாறு. "அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்" (தி.6 ப.96 பா.5) என்று நாவரசரும் அருளிச்செய்தார். திருமால் இவ்வாறு வழிபட்டுச் சக்கரம் பெற்றமையை,