86. | கொடியுடை மும்மதில் வெந்தழியக | | குன்றம்வில்லா நாணியிற் கோலொன்றினால் | | இடிபட எய்தெரித் தீர்இமைக்கும் | | மளவில்லுமக் காரெதிர் எம்பெருமான் | | கடிபடு பூங்கணை யான்கருப்புச் | | சிலைக்காமனை வேவக் கடைக்கண்ணினால் | | பொடிபட நோக்கிய தென்னைகொல்லோ | | பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே. | | 4 |
87. | வணங்கித்தொழு வாரவர் மால்பிரமன் | | மற்றும்வானவர் தானவர் மாமுனிவர் | | உணங்கற்றலை யிற்பலி கொண்டலென்னே | | உலகங்களெல் லாமுடையீர் உரையீர் |
கு-ரை: ‘தக்கதன்றால்‘ என, இறைவரது அறியாமைக்கு இரங்கி அவர்க்கு அறிவுதருவார் போன்று அருளியது. தமக்கென ஒன்றையும் மேற்கொள்ளாத அவரது அருள் விளையாட்டின் பெருமையை வியந்து, பழிப்பது போலப் புகழ்ந்தருளிச் செய்தவாறு. ‘ஓடு‘, ‘உம்‘ எண்ணிடைச்சொற்கள். 4. பொ-ரை: எம்பெருமானிரே, சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், கொடிகளையுடைய மூன்று அரண்கள் வெந்து அழியும்படி, மலை வளைந்து வில்லாகுமாறு கட்டிய நாணியில் தொடுத்த ஓர் அம்பினாலே ஓசையுண்டாக எய்து, இமைக்கும் அளவில் எரித்தீர்; ஆதலின், உமக்கு நிகராவார் யாவர்? ஒருவரும் இல்லை; அங்ஙனமாக, மணம் பொருந்திய மலர்களையே அம்பாகவும், கரும்பையே வில்லாகவும் கொண்ட காம வேளை வெந்து சாம்பராய் அழிய கடைக்கண்ணால் சிவந்து நோக்கியது என் கருதியோ? கு-ரை: ‘உமக்கு எத்துணையும் பற்றாத மிக மெலியோனாகிய அவனை அழித்தது, உமக்கு வெற்றியாவதில்லையன்றோ?’ என்றபடி, இதுவும் மேலைத் திருப்பாடற் கருத்துடையதேயாம். ‘‘வில்லா’’ என்புழி ‘‘கட்டிய’’ என்பது சொல்லெச்சம். எம்பெருமான் என்பது பன்மை ஒருமை மயக்கம். 5. பொ-ரை: கயலும், சேலும் இளைய வாளையுமாகிய மீன்கள், ஒன்றோடு ஒன்று பொருந்தி மேலெழுந்து பாயவும், கூட்டமாகிய
|