| இணங்கிக்கயல் சேல்இள வாளைபாய | | இனக்கெண்டைதுள் ளக்கண் டிருந்தஅன்னம் | | அணங்கிக்குணங் கொள்ளரி சிற்றென்கரை | | அழகார்திருப் புத்தூர் அழகனீரே. | | 5 |
88. | அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான | | அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான் | | மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும் | | முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும் | | வகுத்தவ னுக்குநித் தற்படியும் | | வரும்என்றொரு காசினை நின்றநன்றிப் | | புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர் | | பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே. | | 6 |
கெண்டை மீன்கள் துள்ளவும் அவற்றைக்கண்டு, முன்பு வாளாவிருந்த அன்னப்பறவைகள் அவைகளைத் துன்புறுத்தித் தம் இயல்பினை மேற்கொள்கின்ற (உண்கின்ற) அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே, உலகம் எல்லாவற்றையும் உடையவரே, உம்மை அடிபணிந்து, கை கூப்பித்தொழுகின்ற அடியவராவார், திருமாலும், பிரமனும், மற்றைய தேவரும், அசுரரும், பெரிய முனிவருமாவர்; அங்ஙனமாக. நீர் உலர்ந்த தலையோட்டில் பிச்சை ஏற்பது என்னோ? சொல்லியருளீர். கு-ரை: ‘‘தொழுவாரவர்’’ என்றதில் உள்ள ‘அவர்’ பகுதிப் பொருள் விகுதி. ‘கோடல்’ என்பது, ‘கொண்டல்’ என மருவிற்று. 6. பொ-ரை: சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், உமக்கு அகத்தொண்டு செய்யும் அந்தணர் ஒருவர் தம் நியமப்படி ஒருநாள் அரிசிலாற்றின் நீரைக் கொணர்ந்து உமக்கு ஆட்டுகின்றவர், பசியினால் மிகவும் உடல் மெலிவடைந்து, நீர்க்குடத்தையும் உமது முடியின் மேல் நழுவி விழவிட்டு, அப்பிழைக்காக நடுக்கமுற, நீர் அவரது கனவில் தோன்றி, ‘அன்பனே, நீ அறியாதவாறு உன்னால் நிகழ்ந்த பிழையை நினைந்து வருந்தற்க’, ‘உன் உடல் மெலிவிற்குக் காரணமான இவ்வற்கடம் நீங்குங்காறும், நாள்தோறும் உனக்குப் படியாக ஒரு காசும் கிடைக்கும்’ என்று அருளிச் செய்து, நாள்தோறும் ஒரு பொற்காசினை வற்கடத்திலும் தவறாது நிலைபெற்ற
|