பக்கம் எண் :

508
 
89.பழிக்கும்பெருந் தக்கன்எச் சம்மழியப்

பகலோன்முத லாப்பல தேவரையும்

தெழிந்திட்டவர் அங்கஞ் சிதைத்தருளுஞ்

செய்கையென்னைகொ லோமைகொள் செம்மிடற்றீர்

விழிக்குந்தழைப் பீலியொ டேலமுந்தி

விளங்கும்மணி முத்தோடு பொன்வரன்றி

அழிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை

அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

7



திருத்தொண்டினைச் செய்த அப்புகழ்த்துணையாரது கையிற் சேரும்படி செய்து, அவரை ஆட்கொண்டருளினீர்.

கு-ரை: ‘உமது பேரருள் சொல்லும் தரத்ததோ’ என்பது குறிப்பெச்சம். இத்திருப்பாடலில் குறிக்கப்பெற்ற புகழ்த்துணை நாயனாரது வரலாற்றின் விரிவைப் பெரிய புராணத்துட் காண்க. அகத்தடிமை, அணுக்கத்தொண்டு; அஃதாவது இறைவரது அண்மையிலேயிருந்து அவரது திருமேனியைத் தீண்டிச் செய்தற்குரிய பணிவிடைகளைச் செய்தல். அவற்றைத் திருக்கோயிலிற் செய்பவர், ‘ஆதிசைவ அந்தணர்’ எனப்படுவர். தம், தம் இடத்தில் இவ்வகத்தடிமை செய்தற்குரியார் சிறப்புரிமை பெற்ற சைவர். ‘‘அகத்தடிமை செய்யும்’ என்ற விதப்புத் தோன்றியது. ‘நீ, உன்னை அடைந்தவரை ஒரு ஞான்றும் கைவிடுவாயல்லை’ என நினைந்து எழுந்த பேரன்பினால் என்க. நன்றி, நற்செயல்; திருத்தொண்டு.

7. பொ-ரை: சிறிதிடத்தில் கருமை நிறத்தைக் கொண்ட, முழுவதும் செம்மையாயுள்ள கண்டத்தையுடையவரே, கண் விழிப்பது போலத்தோன்றும் அழகிய வட்டங்களையுடைய தழையாகிய மயிற்றோகையோடு ஏலக்காய் மரங்களைத்தள்ளி, ஒளி வீசுகின்ற மாணிக்கம், முத்து, பொன் என்பவற்றையும் வாரிக்கொண்டு, கரைகளை அழித்து ஓடும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் அழகரே, நீர், உம்மை இகழ்ந்த பெரிய தேவனாகிய தக்கனது வேள்வி அழியும்படி, சூரியன் முதலாக நின்ற தேவர் பலரையும் அவர் நடுங்கும்படி அதட்டி, அவரது உறுப்புக்களில் ஒவ்வொன்றைச் சிதைத்தது என்னையோ?

கு-ரை: ‘நஞ்சுண்டு காத்த நீரே, அவரை ஒறுத்தது, அவரது பிழை நோக்கியேயன்றோ’ என்றல் திருவுள்ளம். இதனால், அவரது