பக்கம் எண் :

509
 
90. பறைக்கண்ணெடும் பேய்க்கணம் பாடல்செய்யக்

குறட்பாரிடங் கள்பறை தாம்முழக்கப்

பிறைக்கொள்சடை தாழப் பெயர்ந்துநட்டம்

பெருங்காடரங் காகநின் றாடலென்னே

கறைக்கொள்மணி கண்டமுந் திண்டோள்களுங்

கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்

பொறிக்கொள்ளர வம்புனைந் தீர்பலவும்

பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

8

91.மழைக்கண்மட வாளையொர் பாகம்வைத்தீர்
வளர்புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
முழைக்கொள்ளர வோடென் பணிகலனா
முழுநீறுமெய் பூசுதல் என்னைகொலோ


பெயக்கண்டும் நஞ்சுண்டமையும் கண்ணோட்டமும் (குறள்-580), யார் மாட்டும் கண்ணோடாது இறைபுரியும் செப்பமும் (குறள்-541) ஆகிய இறைமைக் குணங்களை வியந்தருளியவாறு.

8. பொ-ரை: நஞ்சைக்கொண்ட நீல கண்டத்தில் கண்டசரமாகவும், திண்ணிய தோள்களில் வாகு வலயமாகவும், முன் கைகளிற் கங்கணமாகவும், தலையில் தலைச் சூட்டாகவும், அரையில் கச்சாகவும் புள்ளிகளைக்கொண்ட பாம்புகள் பலவற்றையும் அணிந்தவரே, சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் புனிதரே, நீர், பறை போலும் பெரிய கண்களையுடைய பேய்க் கூட்டம் பாடு தலைச் செய்யவும், குறுகிய வடிவத்தையுடைய பூதங்கள் பறைகளை முழக்கவும், பிறையைக்கொண்ட சடை கீழே தாழ்ந்து அலைய, காலங்கடந்த காடே அரங்கமாக நின்று, அடிபெயர்த்து நடனமாடுதல் என்?

கு-ரை: ‘உயிர்களின் பொருட்டே யன்றோ’ என்பது திருவுள்ளம். பாம்பணியை வகுத்தோதியருளியது அவரது நித்தத் தன்மையை இனிது விளக்குதற் பொருட்டு. "பிறைக்கொள், கறைக் கொள்" என்னும் ககர மெய்கள் விரித்தல். "கரங்கள்" என்புழியும் உம்மை விரிக்க. ‘அரையும்’ என்று அருளிச் செய்யாதே ‘கச்சுமாக’ என்று அருளிச் செய்தமையால், இவ்வாறுரைத்தலே திருவுள்ளமாதலுணர்க.

9. பொ-ரை: ‘கழை’ என்னும் தன்மையைக்கொண்ட கரும்புகளையும், வாழைப்பழங்களையும், கமுக மரத்தின் முற்றிய