பக்கம் எண் :

510
 
கழைக்கொள்கரும் புங்கத லிக்கனியுங்

கமுகின்பழுக் காயுங் கவர்ந்துகொண்டிட்

டழைக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை

அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

9

92.கடிக்கும்மர வால்மலை யாலமரர்

கடலைக்கடை யவ்வெழு காளகூடம்

ஒடிக்கும்முல கங்களை யென்றதனை

உமக்கேஅமு தாகவுண்டீர் உமிழீர

இடிக்கும்மழை வீழ்த்திழுத் திட்டருவி

யிருபாலுமோ டிய்யிரைக் குந்திரைக்கை

அடிக்கும்புனல் சேரரி சிற்றென்கரை

அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

 10



காய்களையும் வாரிக்கொண்டுவந்து கூப்பிடுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற புனிதரே, நீர், மேகம் போலும் பெரிய கண்களையுடைய உமாதேவியை ஒரு பங்கில் வைத்தீர்; அதன் மேலும், வளர்கின்ற புல்லிய சடையின்மேல், 'கங்கை' என்பவளை விரும்பி வைத்தீர். அங்ஙனமாக, செல்வ வாழ்க்கை வாழ நினையாது, புற்றினை இடமாகக் கொள்ளும் பாம்பும், எலும்புமே அணிகலங்களாக, மேனி முழுவதும் சாம்பலைப் பூசி வாழ்தல் என்னோ?

கு-ரை: இஃது, அவரது பற்றின்மையை அருளிச்செய்தவாறு. கழை, கரும்பின் வகை. இளங்காய் ‘கருக்காய்’ எனவும், முற்றியகாய் ‘பழுக்காய்’ எனவும் கூறப்படுமாறறிக. கூப்பிடுதல், ஒலித்தல். ‘தன்பால் வருவித்தல்’ என்பது நயம்.

10. பொ-ரை: இடிக்கின்ற மேகத்தைக் கீழே தள்ளி இழுத்துக் கொண்டு, முன்பு அருவியாய் ஓடி, பின்பு, ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் இருபக்கத்தும் உள்ள கரைகளை மோதும் வெள்ளமாய்ப் பெருகி ஒலிக்கின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே, நீர், கடிக்கும் பாம்பாகிய கயிற்றைக் கொண்டு, மலையாகிய மத்தினால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உண்டாகிய பெருநஞ்சு எல்லாவுலகத்தையும் அழித்துவிடும் என்று இரங்கி, அதனையே