93. | காரூர்மழை பெய்து பொழிஅருவிக் | | கழையோடகில் உந்திட் டிருகரையும் | | போரூர்புனல் சேர்அரி சிற்றென்கரைப் | | பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதர்தம்மை | | ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடைந் | | தழகால்உரைப் பார்களுங் கேட்பவரும் | | சீரூர்தரு தேவர்க ணங்களொடும் | | இணங்கிச்சிவ லோகமே தெய்துவரே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
உமக்கு உரிய பங்காகிய அமுதமாக ஏற்று உண்டீர்; பின்பு இதுகாறும் அதனை உமிழவும் இல்லை. கு-ரை: "இப்பேரருளாலும், அமரத்தன்மையாலும் உம்மை ஒப்பார் பிறர் உளரோ!" என்பது குறிப்பெச்சம். ‘அமுது’ என்றது தேவர்கள் பகிர்ந்துகொண்டு உண்ட அமுதத்தைக் குறித்தது. நஞ்சினை, ‘அமுது’ என்று அருளியது அமுதத்தைப் பகிர்ந்து கோண்ட தேவர்கள், அதனுள் இறைவனுக்குச் சிறிதும் பங்கு வையாது நஞ்சினை மட்டும் முழுதுங்கொடுத்து நீங்கினர் என்னும் இகழ்சசி தோன்றுதற்கு. 11 பொ-ரை: மேகங்கள் மிக்க மழையைப் பெய்ய, அதனாலே வீழ்ந்த அருவியிடத்துள்ள மூங்கிலையும், அகிற்கட்டையையும் தள்ளிக்கொண்டு, இருகரைகளின்மீதும் போரினை மேற்கொள்ளும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, சோலைகள் நிறைந்த திருப்புத்தூர்ப் புனிதரை, நம்பியாரூரனது அரிய தமிழ்ப்பாடல்கள் பத்தினாலும், மொழிக்குற்றம், இசைக்குற்றம் இன்றித் துதிப்பவர்களும், அத்துதியைக் கேட்பவர்களும், சிறப்பு மிக்க தேவர் கூட்டத்துட்கூடி வாழ்ந்து, பின் சிவலோகத்தை அடைவார்கள். கு-ரை: ‘பெய்து’ என்றது ‘பெய்ய’ என்பதன் திரிபு.
|