பக்கம் எண் :

513
 
95. கூறு நடைக்குழி கட்பகு வாயன

பேயுகந் தாடநின் றோரியிட

வேறு படக்குட கத்திலை யம்பல

வாணனின் றாடல் விரும்புமிடம்

ஏறு விடைக்கொடி எம்பெரு மான்இமை

யோர்பெரு மான்உமை யாள் கணவன்

ஆறு சடைக்குடை அப்பன் இடங்கலிக்

கச்சி அனேகதங் காவதமே. 

2



கு-ரை: குலவான் - மேலானவன். மறை - மறு; புள்ளி. ‘ஆன்நெய், எண்ணெய்’ முதலாக நெய் பலவாகலின் ‘தேன்நெய்’ என்றது இரு பெயரொட்டு. "சிவபிரான் சடையில் கொன்றை முதலிய மலர்கள் பலவற்றை அணிதல், அவற்றில் உள்ள தேனாகிய பயன் பற்றி" என்று, தற்குறிப்பேற்றமாக அருளினார். புரிதல், விரும்புதல். இறைவனது விருப்பம், அவனது சடைமேல் ஏற்றப் பட்டது. இனி, ‘தேனால் புரிக்கப்பட்டு உழல்கின்ற சடை’ என்றலுமாம். ‘உழல் சடை’ என இயையாது, ‘உழல் எம்பெருமான்’ என்று இயைத்து, ‘தேனால் ஆட்டப்படுதலை விரும்புகின்றவன்’ என்று உரைப்பினும் அமையும். இவ்வாறன்றி, ‘தேனாவது வண்டு’ என்றும், ‘நெய்’ என்றது ‘தேனை’ என்றும் உரைப்பாரும் உளர். ‘எரித்து’ என்னும் எச்சம், எண்ணுப்பொருளது. ‘மானை’ என்னும் இரண்டனுருபு, ‘கையன்’ என்னும் ஏழாவதன் பொருட்கண் வந்த வினைக் குறிப்பொடு முடிந்தது. ‘மாறுபட’ என்றது. ‘ஆறுபட’ எனப் பிரித்துரைத்தலும் ஆம். ‘அனேகதங் காவதமே, என வரையறுத்தருளியது, புகழ்ச்சி கருதியென்க. ‘அனேகதங்காபதம்’ என்பதும் பாடம்.

2. பொ-ரை: மேலைத்தில்லை அம்பலவாணன், குறுநடையையும், குழிந்த கண்களையும், பிளந்த வாயினையுமுடையனவாகிய பேய்கள் உடன் விரும்பி யாடவும் நரிகள் நின்று ஊளையிடவும், சிறப்புண்டாக நின்று ஆடுதலை விரும்புவதும், உயர்ந்த இடபக்கொடியையுடைய எம்பெருமானும், தேவர் பெருமானும், உமாதேவிக்குக் கணவனும், சடையின்கண் கங்கையை யுடைய தந்தையும் ஆகிய அவ்விறைவனுக்கு உரித்தாயதுமாகிய இடம், ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க்கண் உள்ள, ‘திருவனேகதங்காவதம்’ என்னும் திருக்கோயிலே.

கு-ரை: ‘குறுநடை’ என்பது நீட்டலாயிற்று. வேறு - சிறப்பு. மேலைத்தில்லை கொங்கு நாட்டிலுள்ள ‘பேரூர்’ என்னும் வைப்புத்தலம். இதனைச் சுவாமிகள்கோயில் திருப்பதிகத்திலும் அருளிச்